அமைச்சர்கள், 'பிசி' அ.தி.மு.க., வேட்பாளர்கள் தவிப்பு

இடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபை தொகுதிகளில், தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள், தனி ஆளாக ஓட்டு கேட்டு வலம் வருகின்றனர்.


தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றால் மட்டுமே, அ.தி.மு.க., ஆட்சி தொடர முடியும். எனவே, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில், அ.தி.மு.க.,வினர் முழு மூச்சுடன் பணியாற்றி வருகின்றனர்.


இதற்கு முன், ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே, இடைத்தேர்தல் நடந்தது. அத்துடன், லோக்சபா தேர்தல் போன்று, பொது தேர்தல்கள் எதுவும் அப்போது நடந்ததில்லை. இடைத் தேர்தல் நடக்கும் தொகுதியில், வழக்கமாக, மாநில அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் முகாமிட்டு, தேர்தல் பணியை செய்தனர்.இந்த முறை, லோக்சபா தேர்தல் நடப்பதால், அந்தந்த பகுதி நிர்வாகிகள், உள்ளூரில் தேர்தல் பணிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.


எனவே, மாநில அளவில் நிர்வாகிகள், இந்த முறை இடைத்தேர்தல் தொகுதிகளில் முகாமிட முடியவில்லை.இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள், ஒவ்வொன்றிற்கும் ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். எனவே, லோக்சபா தேர்தல் நடக்கும் தொகுதியில், வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே, அமைச்சர்கள் தலை காட்டுகின்றனர்.


மற்ற நாட்களில் இடைத்தேர்தல் நடக்கும், தொகுதிகளுக்கு சென்று விடுகின்றனர்.இதனால், லோக்சபா தொகுதியில் ஓட்டு கேட்டு செல்லும், அ.தி.மு.க., வேட்பாளர்கள், உள்ளூர் அமைச்சர் இன்றி, தனிநபர்களாக வலம் வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)