ஒதுங்கி நிற்கும் கூட்டணி கட்சிகள் கவலையில் தே.மு.தி.க., வேட்பாளர்

தே.மு.தி.க., நிர்வாகிகளின் செயல்பாடுகளால், தேர்தல் பணியில் இருந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விலகுவதால், அக்கட்சியின், வட சென்னை வேட்பாளர் கவலை அடைந்துள்ளார்.அ.தி.மு.க., கூட்டணி யில், வட சென்னை தொகுதியில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.முதலில், இத்தொகுதியில், வட சென்னை மாவட்ட செயலர், மதிவாணன் போட்டியிடுவதாக இருந்தது. தொகுதி நிலவரம் அறிந்த அவர், போட்டியில் இருந்து விலகி கொண்டார். விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவின் வற்புறுத்தலால், விருப்பமில்லாத மாப்பிள்ளையாக, மோகன்ராஜ் களத்தில் குதித்துள்ளார்.தொகுதியில் உள்ள, அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., நிர்வாகிகள், மோதல் போக்கை கடைபிடித்து வந்துள்ளனர். கூட்டணி சேர்ந்த பின்னும், இவர்களால் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதுமட்டுமின்றி, கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகள் மத்தியில்,கவுரவப் பிரச்னை அதிகரித்துள்ளது.அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி யினரை, தே.மு.தி.க., நிர்வாகிகள் அரவணைத்து செல்வது இல்லை.தேர்தல் செலவுகளில், வேட்பாளர் சிக்கனம் காட்டி வருவது, கூட்டணி கட்சிகளின்நிர்வாகிகளை, மேலும்அதிருப்தி அடைய செய்துள்ளது.இதனால், தேர்தல் பணியில் இருந்து, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் விலக துவங்கியுள்ளனர். வேறு அலுவல்கள் இருப்பதாக, நிர்வாகிகள் ஒதுங்குவதால், அவர்களை பின்பற்றி, தொண்டர்களும் பிரசாரத்திற்கு வருவதில்லை.சமீபத்தில், விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன், வட சென்னையின் பல இடங்களில் பிரசாரம் செய்தார். அவரது பிரசாரத்தை, அ.தி.மு.க.,வினர் வேண்டுமென்றே புறக்கணித்தனர்.தேர்தல் நெருங்கும் நேரத்தில், அ.தி.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பிரசாரத்திற்கு ஒத்துழைக்காமல், ஒதுங்கி வருவதால், தே.மு.தி.க., வேட்பாளர், கவலை அடைந்துள்ளார்.இதற்கு, தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் தான் காரணம் என்பதால், இது குறித்து, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவை சந்தித்து முறையிடவும், அவர் திட்டமிட்டுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)