அசத்தும் பா.ஜ., இணையதளம் அ.தி.மு.க., நிலையோ, 'அந்தோ பரிதாபம்'

சில வாரங்களுக்கு முன், பா.ஜ., இணையதளம், ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. வழக்கமாக, இணையதளம் முடங்கினால், அதை ஓரிரு நாட்களில் சரி செய்து மீட்டு விடலாம். ஆனால், இந்த முறை இணையதளத்தை சரி செய்ய, பா.ஜ., தலைமை அதிக நாட்கள் எடுத்து கொண்டது.தேர்தல் காலத்தில், அதுவும், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், இணையதளத்தை இன்னும் சரி செய்யவில்லை என, வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில் தான், புத்தம் புதிதாக, பா.ஜ., இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது.அதில், நிகழ்வுகள், தலைவர்கள், நிறுவனர்கள், இன்போகிராபிக்ஸ், கார்ட்டூன்கள் என, ஒவ்வொரு தலைப்பிலும், தனித்தனி பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. வரப்போகும் நிகழ்வுகள், பேட்டிகள், தலைவர்களின் பேச்சு, அறிக்கை, போட்டோ கேலரி, 'வீடியோ கேலரி' ஆகியவையும், இடம் பெற்றுள்ளன.பா.ஜ.,வில் சேர விரும்பினாலும், இணைய தளத்தில் படிவம் பூர்த்தி செய்து சேரமுடியும். அந்தந்த மாநில, பா.ஜ., கிளைகளின் இணையதளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டு உள்ளன. நிதியுதவி செய்வதாக இருந்தாலும் செய்யலாம்.காங்கிரஸ் இணையதளமும், 'யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல' என்பதைப் போல, வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரச்னைகள் என்ற தலைப்பில், வெளியுறவு கொள்கை, வேலை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஆகியவை பற்றி, பா.ஜ., அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கட்சியில், 'ஆன்லைன்' முறையில், உறுப்பினராக சேரவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடை அளிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுக்கும், இணைய தளங்கள் இருக்கின்றன.'இணையத்தில் நம்மைப் பற்றி தேடும் எவரையும், நாம் இழந்து விடக் கூடாது' என்பதே, இப்படி தளம் வடிவமைத்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு முக்கிய காரணம். அதை அரசியல் கட்சியினர், நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.நம் ஊரில், தி.மு.க.,வின் இணையதளமும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. கட்சி அறிவிப்புகள் அனைத்தும், அதில் உடனுக்குடன் வெளியாகின்றன. கட்சி பத்திரிகையான முரசொலியின், 'இ-பேப்பர்' இணைப்பும் அதில் தரப்பட்டுள்ளது.ஆனால், 'அ.தி.மு.க., அபிஷியல்' என்ற இணையதளமோ, கடந்தாண்டு ஜூலை மாதத்துக்கு பின், புதுப்பிக்கப்படாமல், பழைய செய்திகளுடன் பரிதாபமாக காட்சியளிக்கிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பற்றிய எந்த விபரங்களும், 'அப்டேட்' செய்யப்படாமல், துாங்கி வழிகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)