முதல் ஓட்டு; இளைஞர்கள் ஆர்வம்

வரும் லோக்சபா தேர்தலில், முதன் முறையாக ஓட்டளிக்க உள்ளோர், தங்களையோ அல்லது சமூகத்தையோ பாதிக்கும் பிரச்னைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, சமூக வலைதளங்களை நாடுகின்றனர். இது, ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

இது குறித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: டுவிட்டரில் இணைந்துள்ள, அதே சமயம், முதன் முறையாக வாக்களிக்க உள்ளோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில், 46 சதவீதம் பேர், தங்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ ஏற்படும் பிரச்னைகளை, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதில் தீவிரமாக உள்ளனர்.உத்தர பிரதேசத்தில், முதன் முறையாக வாக்களிப்போரிடம் மேற்கொண்ட ஆய்வில், 55 சதவீதம் பேர், பிரச்னைகளுக்கு, அரசு மூலம் தீர்வு காண முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. இம்மாநிலத்தில், 61 சதவீதம் பேர், தகவல்களை டுவிட்டரில் பதிவிடுவதன் மூலம், பொது விவாதத்திற்கு துணை புரிவதாக தெரிவித்துள்ளனர். இதே கருத்தை, இந்திய அளவில், 10க்கு, ஏழு பேர் கூறியுள்ளனர். ஆய்வில் பங்கேற்றோரில், 90 சதவீதம் பேர், ஓட்டு போடுவதில் உறுதியாக உள்ளனர்.
முதன் முறையாக ஓட்டளிப்போரில், 54.4 சதவீதம் பேர், தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் மேடையாக, சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். நற்காரியங்களுக்கு உதவும் நோக்கில், கருத்துகளை பதிவதாக, 54.6 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். முதன் முறையாக ஓட்டளிப்போரிடம், இந்தியா மற்றும் உலகளவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)