பழிக்கு பழி வாங்கும் படலம்!

சத்தீஸ்கரில், பா.ஜ., முன்னாள் முதல்வர், ரமண் சிங்கின் மருமகன், டாக்டர் புனீத் குப்தாவுக்கு எதிராக, பல்வேறு மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் வீடு, கிளினிக் உள்ளிட்டவற்றில், அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.


ராய்ப்பூரில் உள்ள, பல்நோக்கு மருத்துவ மனையில், கண்காணிப்பாளராக இருந்த போது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில், 50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, புனீத் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், கடந்த, 2012ல் அரசுப் பணியில் இருந்து அவர் விருப்ப ஓய்வு பெற்றார். அதே நேரத்தில், 2014ல், ரமண் சிங் அரசால், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இதிலும் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.தற்போது, லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கும் நிலையில், இந்தப் பிரச்னை வெடித்துள்ளதற்கு காரணம் என்ன... பழிக்கு பழி வாங்கும் படலம் தான்! தொடர்ந்து, 15 ஆண்டுகள், ரமண் சிங், முதல்வராக இருந்துள்ளார். ஆட்சி அதிகாரம் இல்லாததால், காங்கிரஸ் கட்சியினர், வெறுப்பில் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏவி வருகிறது.அதற்கு பழிவாங்கும் வகையில் தான், ரமண் சிங் மருமகன் மீது, வழக்குகள் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசிய லிலும், புனீத் குப்தா ஈடுபட்டு உள்ளார்.கடந்த, 15 ஆண்டு களில், எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவது போன்றவற்றில், அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த, 2014ல், அந்தாகர்க் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர், கடைசி நேரத்தில் விலகினார். இதற்கு பின்னணியில், புனீத் குப்தா உள்ளதாக, காங்கிரஸ் கூறுகிறது. இவை தான், தற்போது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!
- நீரஜ் மிஸ்ரா -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)