அமைச்சர்கள் புடைசூழ அமித் ஷா மனு தாக்கல்

காந்தி நகர்: மத்திய அமைச்சர்கள் புடைசூழ, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில், நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.



லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாகநடக்கிறது. குஜராத்தில், ஏப்., 23ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.பாக்கியம்இந்நிலையில், பா.ஜ., சார்பில், குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, 54, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள், உடன் இருந்தனர்.



வேட்பு மனு தாக்கலுக்கு பின், அமித் ஷா கூறியதாவது:வாஜ்பாய், அத்வானி போன்ற பெரும் தலைவர்கள் போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில், போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.கேள்விநாட்டை அடுத்து வழிநடத்தப் போவது யார் என்பது தான், இந்த தேர்தலின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.ஹிமாச்சலில் இருந்து, கன்னியாகுமரி வரை, பலதரப்பட்ட மக்களிடம், இந்த கேள்வியை கேட்டபோது, அனைவரும் ஒருமித்த குரலில், மோடி என்ற பெயரையே உச்சரித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.


பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில், 91 வயதான அத்வானிக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)