'காவலாளியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்': மோடி

புதுடில்லி: ''இந்த காவலாளி மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பார்த்து, எதிர்க்கட்சிகள் மிரண்டு போய் உள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.வடகிழக்கு மாநிலங்களான, அசாம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் மூன்று இடங்களில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதவாது:புல்வாமா தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானின்
பாலகோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை, நம் விமானப்படை வீரர்கள், தாக்கி அழித்தனர். இதனால், ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், இரண்டு இடங்களில் மட்டும் மகிழ்ச்சி இல்லை.ஒன்று, அந்த பயங்கரவாதிளின் வீடுகள்; மற்றொன்று காங்கிரஸ் குடும்பம்.இந்த விவகாரத்தில், உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கிறது. ஆனால், காங்., துாக்கத்தை தொலைத்துள்ளது. இந்த காவலாளி ஆட்சி மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பார்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிரண்டு போயுள்ளன.சில தலைவர்கள், வரி ஏய்ப்பு செய்கின்றனர். விவசாய நிலங்களை அபகரிக்கின்றனர். அரசு நிலங்களை,நாளிதழுக்கு வாடகைக்கு விட்டு, லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். ராணுவ ஒப்பந்தங்களில் கமிஷன் பெறுகின்றனர்.நீதிமன்றம், 'ஜாமின்' வழங்கியதால் வெளியே இருக்கும் அவர்கள், இந்த காவலாளியை குறை கூறுகின்றனர்.நம் ராணுவ வீரர்களை பற்றி சந்தேகத்துடன் கேள்வி எழுப்புவோரைப் பற்றி, இந்த நாட்டு மக்கள் கவலைப்படவில்லை. பயங்கரவாதிகளின் குரல்களை பிரதிபலிக்கும் அவர்களை, பாகிஸ்தான் பாராட்டுகிறது. அந்த நாட்டு பத்திரிகைகளில், இவர்களது புகைப்படங்கள் பிரசுரமாகின்றன; அவர்கள் இந்தியாவை பற்றி எப்போதுமே கவலைப்பட்டது இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)