மிஷன் சக்தி பேச்சு: மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று

புதுடில்லி:' மிஷன் சக்தி விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சு தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மிஷன் சக்தி' எனப்படும், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது. அப்போது 3 நிமிடங்களில், 300 கி.மீ., உயரத்தில் உள்ள, 'சேட்டிலைட்' தகர்க்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் நேரத்தில் .பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நம் நாட்டின் வரலாற்றில், மிகவும் முக்கியமான ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பின், இது போன்ற செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதிக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை, நாம் பெற்றுள்ளோம் என்றார். மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியது என புகார் தெரிவித்தன.


இது குறித்து தேர்தல் ஆணையம் மோடியின் பேச்சு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் மோடி பேச்சு குறி்த்த குழு சமர்பித்த அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் ,மோடியின் பேச்சு தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் அல்ல எனவும் எதிர்க்கட்சியினரின் புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என மோடிக்கு நற்சான்று வழங்கியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)