பாதுகாப்பான தொகுதியில் அகாலி தலைவர் பதுங்கல்

பஞ்சாபில், சிரோன்மணி அகாலி தளம் தலைவர், சுக்பீர்சிங் பாதல், பெரோஸ்பூர் தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளார். அகாலி தளத்தின், 20 ஆண்டு கால கோட்டையான இந்த தொகுதியை, கட்சி தலைவரே தேர்வு செய்துள்ளதை, காங்., உள்ளிட்ட கட்சிகள் கிண்டலடித்துள்ளன.லோக்சபா தேர்தலில், பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து, போட்டியிடுகின்றன. பஞ்சாபில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள நிலையில், சிரோன்மணி அகாலிதளம் பிரதான எதிர் கட்சியாக உள்ளது.


இந்த தேர்தலில், சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவரான சுக்பிர் சிங் பாதல், பெரோஸ்பூர் தொகுதியை தேர்வு செய்துள்ளார். இவரது மனைவியும் மத்திய அமைச்சருமான, ஹர்சிம்ரத் கவுர், பதின்டா தொகுதியில் போட்டியிட உள்ளார்.பா.ஜ.,வுடன் சிரோன் மணி அகாலி தளம் கூட்டணியில் உள்ள நிலையில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
சுக்பீர்சிங் பாதல் மற்றும் ஹர்சிம்ரத் கவுரை தோற்கடிக்க, காங்., தரப்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அதனால், தோல்வியை தவிர்க்கும் வகையில், தங்கள் கட்சிக்கு மிகவும் பாதுகாப்பான பெரோஸ்பூர் தொகுதியை, சுக்பீர் சிங் பாதல் தேர்வு செய்துள்ளார்.'கட்சி தலைவர், சவாலான இடத்தில் போட்டியிட வேண்டும்; 20 ஆண்டுகளாக, அகாலி தளத்தின் கோட்டையாக உள்ள, இந்த தொகுதியை, கட்சி தலைவரே தேர்வு செய்து உள்ளார்' என, காங்கிரசார் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதை எல்லாம் கண்டுகொள்ளாத, பாதல் தம்பதி, பெரோஸ்பூர் தொகுதியிலும், பதின்டா தொகுதியிலும், முதல் கட்ட பிரசார பணிகளை துவங்கிஉள்ளனர்.கட்சி நிர்வாகிகளை அழைத்து விருந்து உபசாரம் அளித்து, தேர்தல் பணிகளுக்கு அவர்களை முடுக்கி விடும் வேலையில் ஈடுபட்டுஉள்ளனர்.- ஸ்மிருதி ஷர்மா- சிறப்பு செய்தியாளர்-



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)