பொற்கால ஆட்சி அளித்ததா : ஸ்டாலின் கேள்வி

ராமநாதபுரம் : அதிமுக இதுவரை பொற்கால ஆட்சி அளிக்கவில்லை என ஸ்டாலின் கூறினார்.
லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 29) ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக நவாஸ்கனி போட்டியிடுகிறார். பரமக்குடி சட்டசபை இடைதேர்தலில் சம்பத்குமார் போட்டியிடுகிறார்.

இவர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரத்தில் கூறியதாவது : மத்தியில் பா.ஜவும் , மாநிலத்தில் அதிமுகவும் மக்களுக்கு எவ்வித நலத்திட்டங்களும் செய்யவில்லை. திமுக காலத்தில் தான் மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை அதிமுக பொற்கால ஆட்சி அளிக்கவில்லை. இது அவர்களுக்கும் தெரியும். அவர்கள் ஊழல் பற்றி ஒரு புத்தகமே உள்ளது. திமுக ஆட்சியில் தான் ஏழைகளுக்கு பல உதவி திட்டங்கள் செய்யப்பட்டது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)