பஞ்சாப் என்றாலே பாதல் குடும்பம் தான்!

பஞ்சாபில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த, முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினர், தொடர்ந்து பல்வேறு பதவிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதற்கு முடிவு கட்ட பல கட்சிகள் முயற்சித்தாலும், எதுவும் நடப்பதில்லை.

இந்த முறை, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிய, சுக்பால் சிங் கெய்ரா, பாதல் குடும்பத்துக்கு எதிராக, களம் இறங்கியுள்ளார். அகாலி தளம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் கெய்ராவின் மகன் தான், இந்த சுக்பால் சிங் கெய்ரா.காங்கிரஸ் கட்சியிலும், பின், ஆம் ஆத்மி கட்சியிலும் இருந்த சுக்பால் சிங், பஞ்சாப் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது, 'பஞ்சாப் ஏக்தா பார்ட்டி' என்ற கட்சியை நிறுவியுள்ள கெய்ரா, பதிண்டா லோக்சபா தொகுதியில் போட்டி இடுகிறார்.

பாதல் குடும்பத்தைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர், பா.ஜ., - அகாலி தளம் கூட்டணியின் சார்பில், இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.குடும்ப அரசியலுக்கு பிரபலமான பாதல் குடும்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஹர்சிம்ரத் கவுரை, தோற்கடித்தே தீருவேன் என, கெய்ரா சபதம் எடுத்துள்ளார். குடும்ப அரசியலை பயன்படுத்தி, சர்வாதிகாரமாக பதவிகளை பிடிக்கும், அகாலி தளத்தையும், கூட்டணியில் உள்ள, பா.ஜ.,வையும் ஒடுக்கவே, இந்த தொகுதியில் போட்டியிடுவதாக, கெய்ரா பிரசாரம் செய்து வருகிறார். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டவும், கெய்ரா திட்டமிட்டுள்ளார்.ஆனால், பல ஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பாதல் குடும்பத்தை, புதுக்கட்சியால், அடக்க முடியுமா என, அகாலி தள ஆதரவாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)