பெரம்பலுாரில் மக்கள் நீதி மைய வேட்பாளரின் மனு நிராகரிப்பு

பெரம்பலுார்: பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளரின், வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார்.


பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், மக்கள் நீதி மையம், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள்பிரகாசம், நேற்று(மார்ச் 25) இரவு, 11:30 மணிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, பெரம்பலுாரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான இன்று(மார்ச் 26), பிற்பகல், 2:58 மணிக்கு, மக்கள் நீதி மையம் சார்பில், பெரம்பலுார் மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமையில் மூன்று பேர், தேர்தல் நடத்தும் அலுவலரின், தனிச் செயலர் அறையில் காத்திருந்தனர்.

ஆனால், வேட்பாளர் செந்தில்குமார், பிற்பகல், 3:20 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தார்.

போலீசார், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். கடும் வாக்குவாதத்துக்குப் பின் உள்ளே சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளர், வாடிய முகத்துடன் வெளியேறினார்.
'மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர், வேட்பு மனுவுடன் போதிய ஆவணங்கள் மற்றும் விபரங்கள் சமர்பிக்கவில்லை. அதனால் மனு ஏற்கப்படவில்லை' என்று தேர்தல் நடத்தும் அலுவலரான சாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)