அரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி! விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி.,

கோவை லோக்சபா தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி.,யாக இருப்பவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாகராஜன்.

தமிழகத்தில் இன்னும், சசிகலா ஆதரவாளராக இருக்கும் ஒரே, எம்.பி., இவர் தான். உள்ளூர், அ.தி.மு.க.,வினருடன், இவருக்கு எப்போதுமே நல்லுறவு இருந்ததில்லை. தினகரன் கட்சியிலும் ஈடுபாடு காட்டியதில்லை. 'கட்சியும்வேண்டாம், அரசியலும் வேண்டாம்' என்ற நிலைக்கு வந்து விட்டார். நாடே தேர்தல் பரபரப்பில் இருக்கும்நிலையிலும், 'ரிலாக்ஸ்' மூடில் இருக்கிறார், கோவை, எம்.பி., நாகராஜன். அவரது பேட்டி:கருணாநிதிக்கு பிறகு, தி.மு.க., அப்படியே தான் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு பிறகு, அ.தி.மு.க., இரண்டாகி விட்டதே?

ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க., சேதாரத்தை சந்திக்கும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது. தி.மு.க., பலமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு உதாரணம், ஆர்.கே.நகர் தேர்தல். அவ்வளவு பெரிய கட்சிக்கு, 'டிபாசிட்'பறிபோனதை பார்த்தோமே!வரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?லோக்சபா தேர்தலில் போட்டியிட முயற்சி எடுக்க வில்லை. 'தேர்தலில் நிற்பதில்லை' என, தெளிவான முடிவு எடுத்து விட்டேன்.

எம்.பி.,யாகி தொகுதிக்கு என்ன செய்தீர்கள்?'கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தேன். அதன் பயனாக, இப்போது விமான நிலைய விரிவாக்கம் முற்றுப்பெறும் நிலையில் உள்ளது.ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், மோட்டார், கிரைண்டர்உற்பத்தியாளர்கள் தங்களுக்கு பாதிப்பு என, தெரிவித்தனர். அதுபற்றி, பார்லி.,யிலும்,சம்பந்தப்பட்ட துறைஅமைச்சரிடமும் நேரடியாக பேசி, பிரச்னையை களைய முயற்சி எடுத்தேன்.கோவை, எம்.பி., தொகுதி என்பது சிறிது மாநகரம், அதிகம் கிராமங்களை கொண்டது. கிராமங்களில்குடிநீர் வசதியை பெருக்க வேண்டும். அதற்கு குடிநீர் தொட்டிகள் நிறைய கட்ட வேண்டும் என திட்டமிட்டு, அந்த பணிகளை நிறைவேற்றினேன்.

ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக, தமிழக, எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடியதால், தடையை நீக்க முடிந்தது. 'டிபென்ஸ் காரிடார்' கோவை தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என, முயற்சிஎடுத்தேன்.நான், அந்த அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் கூட்டங்களில் தொடர்ந்து பேசி, 'டிபென்ஸ் காரிடார்' கோவைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தியது எப்படி?தொகுதி நிதியாக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்குவர். அதில், 4.90 கோடி ரூபாயை பயன்படுத்த லாம். அந்த வகையில், 23.50 கோடி ரூபாயை முழு அளவில் பயன்படுத்தியுள்ளேன். இது தவிர, எனக்கு தெரிந்த ராஜ்யசபா, எம்.பி.,க்களிடம் சொல்லி, தொகுதிக்கு, 2 கோடிக்கு மேல் பணிகளை செய்துள்ளேன்.

அ.தி.மு.க., மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளதா?அ.தி.மு.க.,வுக்குள் எத்தனை மனமாச்சர்யங்கள் இருந்தாலும், கோஷ்டிகள் இருந்தாலும், கட்சியே பிளவு பட்டாலும், ஒரு காலத்தில் எல்லாரும் ஒன்று சேரத்தான் போகின்றனர்.ஜெயலலிதா கொண்டு வந்து திட்டங்களும்,எம்.ஜி.ஆர்., செயல்படுத்திய திட்டங்களும் இந்த கட்சியை காப்பாற்றும். 'எனக்கு பின்னாலும், இந்த இயக்கம் இருக்கும்' என்று ஜெயலலிதா கூறிய வாசகம், நிச்சயம் நடக்கும்.அரசியல் எப்படி இருக்கிறது?தமிழக அரசியல் சூழல் வருத்தம் அளிக்கிறது. அரசியல் என்பது, சேவையாக இருந்த காலம் மாறி விட்டது. அந்த காலத்தில் அரசியல்வாதி என்றால் மரியாதை இருந்தது. இப்போதெல்லாம், 'நானும் அரசியல்வாதி' என்று, சொல்வதற்கே அச்சப்பட வேண்டியுள்ளது.

கோவையில் வெற்றி பெற்றவர்கள்
2009 லோக்சபா தேர்தல் முடிவு................பி.ஆர்.நடராஜன்- மா.கம்யூ.,- 2,93,165ஆர்.பிரபு - காங்கிரஸ்- 2,54,501ஈஸ்வரன்- கொ.மு.க.,- 1,28,070பாண்டியன்- தே.மு.தி.க.,- 73,188செல்வகுமார்- பா.ஜ.,- 37,909..........2014 லோக்சபா தேர்தல் முடிவு...........பி.நாகராஜன்- அ.தி.மு.க.,- 4,31,717சி.பி.ராதாகிருஷ்ணன் - பா.ஜ.,- 3,89,701கணேஷ் குமார் - தி.மு.க.,- 2,17,083பிரபு- காங்கிரஸ்- 56,962பி.ஆர்.நடராஜன்- மா.கம்யூ.,- 34,197வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)