அரக்கோணத்தில் ஆளுங்கட்சி, 'அப்செட்'

அரக்கோணம் தொகுதி, பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அதிருப்தியடைந்த ஆளுங்கட்சியினர், தேர்தலுக்கான எந்த சுறுசுறுப்பும் இன்றி, 'சைலன்ட்'டாக உள்ளனர்.

அ.தி.மு.க., கூட்டணியில், அரக்கோணம் தொகுதி, பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர், ஏ.கே.மூர்த்தி போட்டியிடுவார் என, கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.ஏற்கனவே, நேர்காணலுக்கு சென்ற ஆளுங்கட்சியினரிடம், 'உங்கள் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் நிலை உள்ளது; நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வமும் அறிவுறுத்தினர்.இதனால், அதிருப்தி அடைந்த அரக்கோணம் தொகுதி, எம்.பி., அரி, திருத்தணி, எம்.எல்.ஏ., நரசிம்மன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல், அமைதியாக உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)