5 வருஷம் சும்மாவே இருந்தாரா!

''நான் ஒன்று சொல்ல, பத்திரிகையாளர்களாகிய நீங்கள் ஒன்று எழுதி விடுவீர்கள். இதனால், நமக்குள் தேவையற்ற மனவருத்தம் தான் வரும். நீங்களே தொகுதி யில் உள்ள தகவல்களை சேகரித்து எழுதிக் கொள்ளுங்கள். பேட்டி தருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை,'' என கூறிவிட்டார்.

கடந்த, 2014ல், அ.தி.மு.க., வேட்பாளராக காமராஜை அறிவித்தபோது, முன்னாள், எம்.எல்.ஏ., கலிதீர்த்தன் மகன் என்பதால், கட்சியினருக்கு தெரிந்தது. அந்த தேர்தலில், அனைத்து வேட்பாளர்களும் பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், இவர், எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை; பத்திரிகையாளர் சந்திப்பையே தவிர்த்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யாருக்கு சாதகம்?முதல்வர், இ.பி.எஸ்.,சின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகள் உள்ளன. இங்கு, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.'தலைவாசல் வி.கூட்ரோடு ஆட்டுப் பண்ணையில், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான, 900 ஏக்கரில், உலகத்தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா, 396 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.மேலும், 'கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம் உருவாக்கப்படும்' என்ற முதல்வரின் அறிவிப்பால், 15 ஆண்டு கால கனவு, நனவான மகிழ்ச்சி யில், அப்பகுதி மக்கள் உள்ளனர்.'இவை, அ.தி.மு.க., வுக்கு சாதகமாக இருக்கும்' என, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்1. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதை திட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டபோதும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியாததால், திட்டம் நிறைவேறவில்லை. இதற்காக, எம்.பி.,காமராஜ் ஒன்றுமே செய்யவில்லை
2. ஆத்துார் - பெரம்பலுார், அரியலுார் ரயில் பாதை திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆத்துார் - பெரம்பலுார், காரைக்கால் வரை ரயில் பாதை அமைக்க, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இத்திட்டம் குறித்து, எம்.பி., கண்டு கொள்ளாததால், எதுவும் நடக்கவில்லை
3. சேலம், ஆத்துார் - விருத்தாசலம் வழியாக, சேலம் - சென்னைபகல் நேர ரயில் திட்டம் நிறைவேறவில்லை
4. தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், குளிர்பதன கிடங்கு திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது
5. எம்.பி., தத்தெடுத்த க.அலம்பளம் ஊராட்சியில், 2018, டிச., 7ல், மத்திய குழுவினர் ஆய்வு செய்தபோது, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்
6. கச்சிராயபாளையம் - கோமுகி அணை, ரிஷிவந்தியம் - மணிமுக்தா அணை, ஆத்துார் - கரியக்கோவில் அணை, வாழப்பாடி - புழுதிக்குட்டை அணை ஆழப்படுத்துதல், புதிய நீர் வழித்திட்டங்கள், சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தவில்லை
7. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, கல்வராயன்மலையில், கடுக்காய் தொழிற்சாலை கொண்டு வரப்பட்டது. கூட்டுறவு சங்கத்தால் இயக்கப்பட்ட ஆலை மூடப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், மீண்டும் திறக்கும்படி பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும், எம்.பி., எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை
8. இரண்டு கூட்டுறவு மற்றும் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. தனியார் ஆலையில், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்று தர, எந்த முயற்சியும் எடுக்கவில்லை

9. ஆத்துார், ராமநாயக்கன்பாளையம்கல்லாறு அணை, முட்டல் அணை திட்டங்களை செயல்படுத்தவில்லை.கடந்த, 2014 லோக்சபாதேர்தலில், அ.தி.மு.க., சார்பில், டாக்டர் காமராஜ், தி.மு.க., - மணிமாறன், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., - ஈஸ்வரன், காங்., - தேவதாஸ் போட்டியிட்டனர். இவர்களில், டாக்டர் காமராஜ்வெற்றி பெற்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)