தொடர்பு எல்லைக்கு அப்பால்! என்ன சொல்கிறார் ஈரோடு எம்.பி.,

ந்து ஆண்டுகளில் தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை?


என் தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் நடக்கும் அரசு விழா, கட்சி நிகழ்ச்சி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் என, ஒரு மாதத்தில் பல முறை மக்களை சந்தித்துள்ளேன். பார்க்கும் இடங்களில் மக்களிடம் குறை கேட்பேன்.


தொகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள்?ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்துக்கு, நிதி வாங்கி கொடுத்தேன். பல சாலைகள் அமைக்க நிதி தந்துள்ளேன். முருங்கந்தொழுவு - காங்கேயம் சாலை விரிவாக்கத்துக்கு, 22 கோடி ரூபாய் நிதி பெற்று தந்துள்ளேன். பல திட்டங்கள் செய்துள்ளேன்; நினைவில்லை.


எத்தனை மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டுஅளித்தீர்கள்?எதுவும் ஞாபகமில்லையே.


உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடம் கட்சிக்கு நற்பெயர்ஏற்பட்டுள்ளதா?கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். மக்களிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். பிறகு நல்ல பெயர் வராமல் எப்படி இருக்கும்.


உங்கள் கட்சி வெற்றி பெறுமா?நாங்கள் செய்த திட்டங்களை கூறினாலே வெற்றி பெறுவோம்.


பெண்கள் வராத அலுவலகம்


செல்வகுமார சின்னையனுக்கு, எம்.பி., அலுவலகம் என, தனியாக இல்லை. காளிங்கராயன் விடுதியில், ஒரு அறையில் அலுவலகம் வைத்துள்ளார். ஆனால், எப்போதும் அது மூடியே கிடக்கும். விடுதியில் அலுவலகம் என்பதால், பெண்கள் வருவதில்லை.


நாம், 20க்கும் மேற்பட்ட முறை, அவரது காளிங்கராயன் விடுதி அலுவலகம் சென்ற போதும், பூட்டி கிடந்தது. பல முறை போனில் தொடர்பு கொண்டபோதும், 'எனக்கு, 15 துக்க நிகழ்ச்சிகள் இருக்கு. நாளை பேசுவோம்' எனக் கூறி, துண்டித்தார். மிகவும் சிரமப்பட்டே அவரது கருத்தை வாங்க முடிந்தது.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்...


* ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம், ஈரோட்டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, அ.தி.மு.க., அரசு தொடர்ந்து வெளியிட்டாலும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை


* மஞ்சள் சார்ந்த தொழில் நிறுவனம் அமைக்க முயல்வேன் எனக்கூறி நிறைவேற்றவில்லை.


* ஈரோடு மாநகரில், ஒருங்கிணைந்த ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற, எம்.பி., எந்த முயற்சியும் எடுக்கவில்லை


* ஜவுளி தொழில் சார்ந்த கல்லுாரி,பயிற்சி மையங்கள் தேவை. மத்தியஅரசின் விசைத்தறி சேவை மையம் ஈரோட்டில் இருந்தாலும், அதற்கு சொந்த கட்டடம் இல்லை. இதற்கு, எம்.பி.,
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை


* சாய, சலவை, தோல் ஆலைகழிவுகளுக்கு தீர்வு காண, மத்திய - மாநில அரசுகளிடம், இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை


* மத்திய அரசு மூலம் தொழிற்சாலைகள், பயிற்சி கூடங்கள் ஏதும் அமைக்க முயலவில்லை


* ஈரோடு மாவட்ட மலைப் பகுதியில் உள்ள மலையாளிகளை, எஸ்.டி., பட்டியலில் சேர்ப்பேன் எனக்கூறி, இதுவரை சேர்க்கவில்லை.

சட்டசபை தொகுதிகள்


1. ஈரோடு கிழக்கு, 2. ஈரோடு மேற்கு, 3. மொடக்குறிச்சி,4. தாராபுரம் - திருப்பூர் மாவட்டம், 5. காங்கேயம் - திருப்பூர்6. குமாரபாளையம் - நாமக்கல்.

எம்.பி., நிதி ஒதுக்கீடு விபரம்


எம்.பி., தொகுதி நிதி மேம்பாட்டு பணிகள் பற்றி, 30க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டபோதும், நேரில்சந்தித்தபோதும், 'மூன்றுமாவட்டங்களுக்கும் நிதி தருவதால், தெளிவான பட்டியல் தர மாட்டேன் என்கின்றனர். பட்டியல் கிடைத்தால், நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்' எனக் கூறி விட்டார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)