அடக்கி வாசிக்கும் அ.தி.மு.க., அணிகள்

'கட்சியில் உரிய முக்கியத்துவம் தருவதில்லை' எனக் கூறி, லோக்சபா தேர்தல் பணிகளில், அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.மாவட்டம், ஒன்றிய அளவில், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, மாணவர் அணி, வக்கீல் பிரிவு, மகளிர் அணி உட்பட, பல சார்பு அணிகள், அ.தி.மு.க.,வில் உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் அமைப்பாளர், தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


'அ.தி.மு.க., ஆளும் கட்சியாக உள்ள நிலையில், தங்களுக்கு, உரிய முக்கியத்துவத்தை, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், செயலர்கள் தருவதில்லை' என, பல மாதங்களாக, அணி அமைப்பாளர் கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.அனைத்து தேர்தல்களிலும், அணி அமைப்பாளர்களின், சேவை முக்கியமானதாக இருக்கும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலின் போது, சார்பு அணி நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை, வேட்பாளர்கள் தரவில்லை.வரும் லோக்சபா தேர்தலிலும், இதே நிலைதான் நீடிக்கும் என்பதால், தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளனர்.


சார்பு அணி அமைப்பாளர்கள் சிலர் கூறியதாவது:கூட்டம் நடத்தவும், ஆர்ப்பாட்டம் செய்யவும், கட்சி தலைமைக்கு, சார்பு அணி நிர்வாகிகள் தேவைப்படுகின்றனர். உதவி கேட்டு சென்றால், எங்களை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், மாவட்ட செயலர்களும் உதாசீனப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பணம் கொடுத்தால், மக்கள் ஓட்டு போட்டு விடுவர் என்ற எண்ணத்தில் வேட்பாளர்கள் உள்ளனர். இதனால், நாங்கள், லோக்சபா தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)