கோஷ்டி பூசல், ஜாதி அரசியல்: ஈரோடு தெற்கு தி.மு.க.,

ஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலராக முத்துசாமி பதவியேற்ற பின், அக்கட்சியில் கோஷ்டி பூசல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது.


முன்னாள் மாவட்டச் செயலர் ராஜா, மாநில துணை பொதுச் செயலர் சுப்புலட்சுமியின் ஆதரவாளர்கள், முத்துசாமிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில், வார்டு உறுப்பினரை கூட, கட்சி தலைமையால் நீக்க முடியாது என்பதை உணர்ந்த, சுப்பு லட்சுமி கோஷ்டியினர், முத்துசாமியை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில், உத்வேகத்துடன் ஈடுபட்டுள்ளனர்.


இதேபோல், தெற்கு மாவட்ட, தி.மு.க.,வில் ஜாதி ஆதிக்க சூழலை, தொண்டர்கள் வெளிப்படை யாகவே தெரிவித்து வருகின்றனர். ஏழு ஒன்றியம் மற்றும் எட்டு பகுதி செயலர்களில், ஐந்து பேர், கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.இவர்கள் யாருமே, பிற சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று, குறை, நிறை கேட்பதில்லை. ஜாதிய ஆதிக்கத்தால், மக்கள் தொடர்பிலிருந்து, கட்சி விலகி சென்றுள்ளது. இது, லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.


'இப்போதாவது காலனிகள் பக்கம், கட்சி நிர்வாகிகள், அடிக்கடி செல்ல வேண்டும்' என, சில தினங்களுக்கு முன் நடந்த, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், மாவட்டச் செயலர் முத்துசாமி முன்னிலையில், நிர்வாகிகள் பேசினர்.ஜாதிய அரசியல், கோஷ்டி பூசலை சமாளிக்கும் முன்பாகவே, லோக்சபா தேர்தல் வந்து சென்று விடும் என்பதால், தி.மு.க., பரிதவித்து வருகிறது.


இது குறித்து, கட்சியினர் கூறியதாவது:பணம் செலவழிக்க தயங்குவது, கோஷ்டி பூசல், ஜாதிய ஆதிக்கம் தலைதுாக்கி உள்ள நிலையில் தான், லோக்சபா தேர்தலை சந்திக்கிறோம். எதிர்க் கட்சிகள், கூட்டணி கட்சியினரை சமாளிப்பதை விட, சொந்த கட்சியினரை சமாளித்து, ஒருங்கிணைப்பது சவாலான விஷயம். எனவே, ஈரோடு தொகுதியை, கூட்டணி கட்சிக்கு தள்ளி விட்டாலும் நல்லது தான்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)