வசந்தகுமாருக்கு பொன்னார் கேள்வி

நாகர்கோவில்: ''நாங்குநேரி மக்களை நிர்கதியாக்கி விட்டு, இங்கு வருவது ஏன் என்பதற்கு, வசந்தகுமார் பதில் சொல்ல வேண்டும்,'' என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவரது பேட்டி:நாங்குநேரியில் எந்த வளர்ச்சிப் பணியையும், காங்கிரஸ், எம்.எல்.ஏ., வசந்தகுமார் செய்யவில்லை. நாங்குநேரி மக்களை நிர்கதியாக்கி விட்டு, இங்கு வருவது ஏன் என்பதற்கு, வசந்தகுமார் பதில் சொல்ல வேண்டும். இதை விட துரோகம், வேறு எங்கும் இருக்க முடியாது. பழுத்த மரத்தில் வந்து சேரக்கூடிய வவ்வால் போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து விழுந்தது கிடையாது. என் வாழ்வும், வளமும், இந்த மாவட்டத்தைச் சார்ந்த மக்களைச் சார்ந்து தான் இருந்தது. இதற்கு அப்பாற்பட்டு போனது கிடையாது.ராகுல், கேரள மாநிலம், வயநாட்டில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வருகின்றன. வட மாநிலங்களில் தோல்வி உறுதி என நினைத்ததால், தென் மாநிலங்களை நோக்கி, காங்கிரஸ் தலைவர்கள் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)