'மோடிக்கு ஓட்டு கேட்டால் அடித்து உதையுங்கள்': எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்கள் மற்றும் அவரது பெயரை உச்சரிப்பவர்களை அடித்து உதைக்கும்படி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, மதச் சார்பற்ற ஜனதா தள, எம்.எல்.ஏ., சிவலிங்க கவுடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அரிசிகெரே என்ற இடத்தில் நடந்த, மதச் சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் கூட்டத்தில், எம்.எல்.ஏ., சிவலிங்க கவுடா பேசியதாவது:கடந்த தேர்தலின்போது, சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு வருவதாகவும், மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்வதாகவும், மோடி வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதிகளை, பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. எனவே, மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்கள் மற்றும் அவரது பெயரை உச்சரிப்பவர்களை பார்த்தால், அடித்து உதையுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


இதற்கு கண்டனம் தெரிவித்த, பா.ஜ., செய்தி தொடர்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான சுரேஷ் குமார், பிரதமர் மோடிக்கு எதிராக, கவுடா, வன்முறையை துாண்டுவதாக குற்றஞ்சாட்டினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)