அ.தி.மு.க.,வில் இணைவதை விட கடலில் குதிப்பதே மேல்

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் இணைவதை விட, கடலில் குதிப்பதே மேல்,'' என, அ.ம.மு.க., துணைபொதுச்செயலர் தினகரன்தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க.,வுடன், எஸ்.டி.பி.ஐ., கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், எஸ்.டி.பி.ஐ., கட்சி வேட்பாளர், தெகலான் பாகவியை ஆதரித்து, நேற்று முன்தினம், தினகரன் பிரசாரம் செய்தார்.அப்போது, அவர்பேசியதாவது:ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட, எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. மற்றொரு கூட்டணி, ராகுல் தான், அடுத்தபிரதமர் என்று கூறுகிறது.தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், 'அடுத்த பிரதமர் யார்' என, அறிவிக்காத நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ராகுல் தான் பிரதமர்' என, அறிவித்துள்ளார்.

அவர்கள், தங்களுக்கு சிறுபான்மையினர் ஆதரவு இருப்பது போன்ற, ஒரு தோற்றத்தை உருவாக்கி, குழப்பம் ஏற்படுத்தபார்க்கின்றனர்.தேசிய கட்சிகளை நம்பி, தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. அவர்களால், தமிழகத்தில், தனியாக, ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது.ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, முடிவிற்குவந்திருக்க வேண்டும்.மத்திய அரசின் தயவால், அந்த ஆட்சி தொடர்கிறது. தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வினர், எங்களுடன் இணைவர். நாங்கள், எந்த காலத்திலும், அவர்களுடன் இணைய மாட்டோம். அ.தி.மு.க.,வுடன் இணைவதை விட,கடலில் குதிப்பதே மேல்.இவ்வாறு, தினகரன் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)