முலாயம் தொகுதியில் அகிலேஷ் : இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியா?

லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அசம்கார் தொகுதி யில் போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 80 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.இதில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான,
சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் மற்றும் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டிஇடுகின்றன.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட வேட்பாளர்கள்பட்டி யலில், அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள், நடிகை ஜெயா பச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், சமாஜ்வாதி நிறுவனரும், அகிலேஷின் தந்தையுமான, முலாயம் சிங்கின் பெயர், அதில் இடம் பெறவில்லை.கடந்த லோக்சபா தேர்தலில், முலாயம் சிங், 79, வெற்றி பெற்ற, அசம்கார் தொகுதி யில், இந்த முறை, அவரது மகன் அகிலேஷ் போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னோஜில், அகிலேஷின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார்.

அதேபோல், சமாஜ்வாதி யின், 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும், முலாயம் சிங்கின்
பெயர் இடம் பெறவில்லை.சமாஜ்வாதி கட்சியை, தன் தந்தை முலாயம் சிங் யாத விடமிருந்து கைப்பற்றிய அகிலேஷ் யாதவ், அவரை, படிப்படியாக ஓரம் கட்டி வருகிறார். தற்போது,தந்தையின் தொகுதியிலேயே போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். 'அரசியலில் வளர்த்து, ஆளாக்கிய தந்தைக்கு செய்யும் நன்றிக்கடனா இது...' என, சமாஜ்வாதி தொண்டர் கள் புலம்புகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)