திமுக சின்னத்தில் மதிமுக வேட்பாளர் போட்டி

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தல் குறித்து ஈரோடு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : ஈரோட்டில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக அறிவித்துள்ளது. மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்று ஸ்டாலினும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருக்கிறார். நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உதய சூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)