தேர்தலில் போட்டி: தேவ கவுடா திடீர் முடிவு

பெங்களூரு:லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை' என கூறி வந்த, மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர், தேவ கவுடா, 85, தற்போது, தும்கூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, 28 லோக்சபா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், இரண்டு கட்டமாக, தேர்தல் நடக்கவுள்ளது.ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தளம், எட்டு தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள, காங்கிரஸ், 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தனக்கு வயதாகி விட்டதால், தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என, தேவ கவுடா, ஏற்கனவே அறிவித்திருந்தார். தன் பேரன்களான, நிகில், பிரஜ்வால் ஆகியோருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

இந்நிலையில், தன் முடிவை மாற்றியுள்ள, தேவ கவுடா, தும்கூரு தொகுதியில் போட்டியிடப் போவதாக, நேற்று அறிவித்தார்.தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள, எட்டு தொகுதிகளில், தலைவர் குடும்பத்துக்கு மட்டுமே மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், மதச் சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)