பிரதமரா... நானா... ஜோக்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு பேட்டி

நேரடியாக பதில் சொல்லுங்க... பிரதமர் போட்டியில் நீங்கள் உள்ளீர்களா?


'வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 220 தொகுதிகள் கிடைக்கும். அப்போது பெரும்பான்மை இல்லாத நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். அந்த நிலையில், பிரதமர் பதவியில் மோடிக்கு பதிலாக நான் முன்னிருத்தப்படுவேன்' என, சிலர் எழுதிவருகின்றனர்.அதுபோன்ற ஒரு சூழ்நிலையும் வராது, பிரதமர் பதவிக்கான போட்டியிலும் நான் இல்லை. சும்மா ஜோக்கடிக்காமல்பத்திரிகைகளும், ஊடகங்களும், சீரியசாக எழுத வேண்டும்.அப்படியானால், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும்என்கிறீர்களா?
இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்... கடந்த தேர்தலின்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமைந்தது. இந்தத் தேர்தலில், அந்த சாதனையை முறியடிப்போம்.மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில், கட்சிக்கு முன்னேற்றம் கிடைக்கும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், ராஜஸ்தானில், ஏற்கன வே வென்ற தொகுதிகளை தக்க வைப்போம். ஆந்திரா, தெலுங்கானாவிலும், வெற்றியை எதிர்பார்க்கிறோம்.

இந்த அதீத நம்பிக்கைக்கு காரணம்?
கடந்த, ஐந்து ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்றி .
உள்ளோம். நாடு முழுவதும் விமான நிலையங் களின் எண்ணிக்கை, 100ஆக உயர்ந்து உள்ளது40 ஆயிரம், கி.மீ.,க்கு நெடுஞ் சாலைகள் விரிவு படுத்தப்பட்டுஉள்ளன.அதைத் தவிர, 40 ஆயிரம், கி.மீ.,க்கு நெடுஞ் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


ரயில்வேயில், 12 ஆயிரம், கி.மீ.,க்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் மட்டும், 16 லட்சம் கோடிரூபாயும், நீர்வளம் மற்றும் கங்கை மறு சீரமைப்புக்காக, ரூ.ஒரு லட்சம் கோடி செலவிடப் பட்டுள்ளது. அனைவருக்கும், சமையல், 'காஸ்' இணைப்பு என, பல திட்டங்களை கூறிக் கொண்டே செல்லலாம். உங்கள் பத்திரிகையில் இதை சேர்க்க இடம் இருக்குமா பார்த்துக் கொள்ளுங்கள்.


வளர்ச்சி திட்டங்களால் வெற்றி பெறுவோம் என்கிறீர்கள். தற்போது, எதிர்க்கட்சிகள், மெகா கூட்டணி அமைத்துள்ளனவே. அது வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
நாங்கள் வலிமையாக இருப்பதால் தான், அவர்கள் ஒன்று சேருகின்றனர். இதுவே, நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதையும், எங்கள் வலிமையையும் காட்டுகிறது. பொது நோக்கம் இல்லாதது அந்தக் கூட்டணி. அவர்களின் ஒரே பொது நோக்கம், பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டுமே.
நாக்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறீர்களே... வெற்றி பெறுவீர்களா?
நீண்ட காலமாக அந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை செயல் படுத்தியுள்ளேன். என்னை அத்தொகுதி மக்கள் வெற்றி பெறச் செய்வர். மேலும், மஹாராஷ்டிராவில், நாங்களும் எங்கள்கூட்டணி யினரும் அமோக வெற்றி பெறுவோம். அது, மோடி அரசின் சாதனை மைல் கல்லாக அமையும்.

மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, 61. மஹா.,வில்,1996 - 1999ல் பொதுப் பணித் துறை அமைச்ச ராக இருந்தபோது, அவர் மேற்கொண்ட சாலை பணிகளே, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப் படையாக அமைந்தது. பா.ஜ.,வின் தேசியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருந்து வந்தவர்; தற்போதும், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., இடையே பாலமாக உள்ளார்.

கட்சியில் முக்கிய பிரச்னைகள் ஏற்படும் போது, அதை திறம்பட கையாளும் திறமை உள்ளவர். அதற்கு உதாரணம், சமீபத்தில், கோவாவில், முதல்வராக இருந்த, மனோகர் பரீக்கர் மறைவுக்கு பிறகு, ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, சாதுர்யத்தால், அதற்கு தீர்வு கண்டார்.


ராமர் கோவில் விவகாரத்தை, நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை; விரும்பியதும் இல்லை. ராமர் கோவில் கட்டுவோம் என்பதில் நாங்கள்உறுதியாக உள்ளோம். அதற்கான மூன்று வழிகளில், மூன்றாவதான,சமரச பேச்சு முயற்சி நடந்து வருகிறது.

அடுத்தத் தேர்தலின் போது, ராமர் கோவில் பிரச்னை குறித்து பேசமாட்டோம்; அதற்குள் தீர்வு காணப்படும். ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே, கட்சியின் விருப்பம்.
நிதின் கட்கரி,

மத்திய, நெடுஞ்சாலை,கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்


- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)