4 தொகுதிக்கு மட்டும் தே.மு.தி.க., தேர்தல் அறிக்கை

தேர்தல் பிரசாரத்தை துவக்கும் முன், நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட, தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், லோக்சபா தேர்தலுக்கான, முழுமையான தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடுவதில், அக்கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, கட்சி போட்டியிடும், நான்கு தொகுதிகளில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி, தேர்தல் அறிக்கை வெளியிட, தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.இதற்காக, வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி தொகுதிகளில் உள்ள பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும், அக்கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்டு கொடுத்துஉள்ளனர்.இதன் அடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில், வரும், 25ம் தேதி, பிரேமலதா பிரசாரத்தை துவங்க உள்ளார்.எனவே, அதற்கு முன்பாக, தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிட, தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)