கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

தூத்துக்குடி: தூத்துக்குடி, விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு பதில் கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில், கனிமொழி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பா.ஜ., ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக சின்னப்பன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று விளாத்திகுளம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சின்னப்பனுக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது, தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடனும், பிரதமராக இருந்து நாட்டை கட்டி காக்கின்ற மோடியின் ஆசி பெற்ற நமது கூட்டணி வேட்பாளர் அன்பு சகோதரி கனிமொழி என தவறாக கூறினார். இது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்தியது. இதன் பின் சுதாரித்து கொண்ட சின்னப்பன், தமிழிசை சவுந்திரராஜன் எனக்கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)