ஜெயகுமார் மீது தி.மு.க., புகார் மனு

சென்னை, 'தேர்தல் நடத்தை விதிகளை மீறிய, அமைச்சர் ஜெயகுமார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், நேற்று மனு அளித்த, தி.மு.க., சட்டப்பிரிவு செயலர், கிரிராஜன் கூறியதாவது:'அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டால், 1,500 ரூபாய் வழங்கப்படும்' என, மக்களை துாண்டும் வகையில், அமைச்சர் ஜெயகுமார் பேசி உள்ளார். அமைச்சராக இருப்பவர், கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருப்பதை திரித்து கூறி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு முரணாக, அமைச்சர் பேசி உள்ளார்.'அமைச்சரே, இவ்வாறு பேசி இருப்பது, அதிகார துஷ்பிரயோகம்; தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பானது' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், புகார் மனு அளித்துள்ளோம்.தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)