நெல்லை தி.மு.க., ஆபீசில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலர் ஆவுடையப்பன் வீடு, மகாராஜ நகரில் உள்ளது. அதே பகுதியில் மாவட்ட தி.மு.க., அலுவலகமும் உள்ளது. நேற்று மாலை கட்சி அலுவலகத்தில், கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கசிந்தது. வருமான வரித்துறையினர் காத்திருந்தனர்.

பணப்பட்டுவாடா துவங்கும் முன் உள்ளே சென்று சோதனை நடத்தினர். அதிகாரிகளை கண்டதும் ஆவுடையப்பன், மைதீன்கான் உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு பையில் இருந்த பணத்தை சாலையில் நின்ற தோழமைக் கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் துாக்கி போட்டனர்.

அதை கவனித்த வருமான வரித்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ஆவுடையப்பன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். கட்சி அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

சோதனைக்குப் பின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் கட்சியினரிடம், ''தகராறு செய்து விடாதீர்கள். பிறகு செந்தில் பாலாஜி மாதிரி ஆகிவிடும்,'' என்றார்.


Anbuselvan - Bahrain, பஹ்ரைன்
07-ஏப்-2024 19:15 Report Abuse
Anbuselvan ஓ இதுதானா சமாசாரம் . நெல்லை ரயிலில் பிடிபட்ட பணத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதோ.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்