சர்ச், மசூதிகளுக்கு தொடருது 'விசிட்'

மதுரை வடக்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் தளபதியை எதிர்த்து, ஏற்கனவே அக்கட்சியில் இருந்து பா.ஜ.,விற்கு தாவி, சீட் பெற்ற திருப்பரங்குன்றம், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., டாக்டர்சரவணன் நிற்கிறார். இத்தொகுதியில் ஏராளமான சர்ச், பள்ளிவாசல்கள் உள்ளன. இதனால், இந்த ஓட்டுக்களை மனதில் வைத்து, எல்லா சர்ச், பள்ளிவாசல்களுக்கும், அடிக்கடி சென்றுவருவதை, சரவணன் வாடிக்கையாக வைத்துள்ளார்.


பா.ஜ., சிறுபான்மை அணியினர், ஒவ்வொரு சர்ச், பள்ளிவாசல்களாக சென்று, அவருக்காக
ஆதரவு திரட்டியும் வருகின்றனர். இந்த முறை எப்படியாவது, சிறுபான்மையினர் வாக்குகளை, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பெற்று விட வேண்டும் என்ற முயற்சியில், அந்த கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தளபதியோ, 'அவர் சுற்றி வரட்டும்; எங்களுக்கு தான் அந்த ஓட்டு' என்கிறாராம். ஆனாலும் தளபதிக்கு அதீத நம்பிக்கை தான்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)