தொண்டாமுத்துாரில் போட்டியிடும் மன்சூர் அலிகான், 'வாக்கிங்' செல்வது, மீன் மார்க்கெட்டில் அமர்ந்து பேசுவது, நாயுடன் கொஞ்சுவது, பாட்மின்டன், கிரிக்கெட் விளையாடுவது என, மனம் போன போக்கில் பிரசாரம் செய்து, மக்களை கவர முயற்சி செய்கிறார். அனைத்தையும், ஓர் அலட்சிய உடல்மொழியுடனே செய்வது, அவரை வித்தியாசமாகக் காட்டுகிறது.
சுண்டக்காமுத்துார் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று ஓட்டு சேகரித்தார். யார் அருகில் சென்றாலும், கை குலுக்கி ஓட்டு கேட்கிறார். யாராவது தயங்கினால், 'அட கைய குடுங்க பாஸ், கொரோனாலாம் இல்ல' என்றபடி, கை குலுக்குகிறார். அவர், 'மாஸ்க்' அணிவதோ, சமூக இடைவெளியை பின்பற்றுவதோ இல்லை. நடிகர் என்பதால், மக்களும் கொரோனா பயத்தை மறந்து, கை குலுக்கி வருகின்றனர். எங்கே கொண்டுபோய் விடுமோ?
வாசகர் கருத்து