தொண்டாமுத்தூரில் போட்டி ஏன்? நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

மனதில் இருக்கும் கருத்துகளை 'பட்'டென்று போட்டு உடைப்பவர். நக்கல், நையாண்டிக்கு பஞ்சமிருக்காது. அவரது பேச்சுகள் சில சமயம், அவருக்கே வில்லனாக அமையும். சில சமயம் காமெடியாக்கி விடும். கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் வரிசையில் இவரும் ஒருவராகி விட்டார். இவர்தான் நடிகர், இயக்குனர், தமிழ் தேசிய புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான். தேர்தல் களத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:

தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த பின், 'எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று மக்கள் கேட்டதால், 'வாபஸ்' பெறப்போவதாக கூறிய நீங்கள், அந்த கருத்தை வாபஸ் வாங்கி விட்டு போட்டியிடுகிறீர்களே, ஏன்?நான் போட்டியிட முற்பட்டதும், பலமுனை தாக்குதல் என் மீது தொடுக்கப்பட்டது. அது, திட்டமிட்ட சதியாக எனக்கு தெரிந்தது. களத்தில் இறங்கி விட்டோம்; என்னவென்று பார்த்து விடுவோம் என்று தான், போட்டியிடுகிறேன்.

கோவை தொண்டாமுத்துார் தொகுதியில், போட்டியிட ஏன் ஆர்வம்?நான் பிறந்தது கொங்கு மண்டலம். சொந்த ஊர் ஜவ்வாதுபட்டி புதுார். எல்லோரும் மன்சூர் அலிகான், இங்கே ஏன் வந்து நிற்கிறான்னு யோசிப்பாங்க. சொந்த மாவட்டம் என்பதால் போட்டியிடுகிறேன். வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தில், கொங்கு தமிழில் பேசித்தான் நான் சினிமா உலகிற்கு அறிமுகமானேன்.

புதுக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன?நமக்கென்று ஒரு இயக்கம் காண்போம் என, ஆரம்பித்தேன். இங்கே தொண்டனே தலைவன். தலைவனே தொண்டன். எனக்கு மேலே கேள்வி கேட்கிறவன் யாரும் இருக்கக்கூடாது. கீழேயும் இருக்கக்கூடாது. எல்லோரும் சமம் என்று கருதுபவன் நான்.

சுயேச்சையாக போட்டியிடும் நீங்கள், வெற்றி பெற முடியுமா?முடியும். சுயேச்சைகள் மந்திரிகளாகி உள்ளனர். அ.தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செம்மலை, அமைச்சராக்கப்பட்டாரே. சட்டசபை தேர்தலில் பல அதிசயங்கள் நடக்கும். என் ரசிகர்களை நம்பியும் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)