ஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா?

புதுடில்லி : பிரதமர் நரேந்திரமோடி, வரும் ஜூன் 19, புதனன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில், விவாதிக்கப்பட உள்ள 'ஒரே நாடு ; ஒரே தேர்தல்' பற்றித்தான். இது சாத்தியமா என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது.

லோக்சபா பலம் :நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 354 இடங்களை வென்றுள்ளது. பா.ஜ., தனித்தே 303 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே, எந்த ஒரு மசோதாவையும் லோக்சபாவில் நிறைவேற்ற பா.ஜ.,வால் முடியும்.

ராஜ்யசபா 102 தான் :ஆனால், ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 254 இடங்களில் பா.ஜ.,விற்கு வெறும் 102 பேர் தான் உள்ளனர். எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து கட்சியினரின் ஆதரவு தேவை. எனவே தான், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மோடியின் முக்கியான அஜண்டாவாக இருந்தாலும், கருத்தொற்றுமை ஏற்படுத்தவே பா.ஜ., முயன்று வருகிறது.

முதல் 3 தேர்தல்கள் :அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் வல்லுநர்களிடையே இதன் சாதக பாதக அம்சங்கள் அலசப்பட்டு வருகின்றன. முதலில், வரலாற்று ரீதியில் இது நாட்டிற்கு புதிதல்ல. நாட்டின் முதல் தேர்தலான 1952 லேயே நாடுமுழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தான் நடந்தன.

அதன்பின்னர், 1957, 1962 என்று மூன்று தேர்தல்களும் அப்படித்தான் நடந்தன. பின்னர்தான் மாறியது. பிரதமர் மோடி அதனை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கருதுகிறார். ஏனெனில், நாடு பெரும்பாலான மாதங்களை தேர்தல்களிலே செலவிட்டால், வளர்ச்சிப்பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது என்பதே.

அடிக்கடி தேர்தல்கள் :கடந்த 17 வது லோக்சபா தேர்தலுக்கு முன்னர் மத்திய பிரதேசம்,சத்தீஷ்கர், மிஷோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தன. லோக்சபா தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக் தேர்தல். அடுத்து வரவுள்ள 6 மாதங்களில் அரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில தேர்தல்கள் என்று எப்போதும் நாட்டில் தேர்தல்கள் நடந்த வண்ணமே இருப்பது வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த முடியாமைக்கு முக்கிய காரணம் என்று மோடி நினைக்கிறார்.

செலவு குறையும் :அதேபோல, தேர்லுக்கான செலவினங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும். எனவே தான், தேர்தல் கமிஷனும் இதற்கு சம்மதித்து விட்டது. இனி மீதமிருக்கும் தடை அரசியல் மட்டும் தான்.
அரசியலமைப்பு சிக்கல் :அதில் தான் ஒரு சிக்கல், அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டமன்றங்களை கலைக்க வேண்டியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அரசியல் அமைப்பு சட்டத்தின் 83( 2) பிரிவும், 172 வது பிரிவும் பாதுகாக்கின்றன. மாநில அரசுகளை கலைக்க வழியுள்ள ஒரே பிரிவு 356 மட்டும் தான். எனவே தான் அனைத்து கட்சியின் பொதுக்கருத்து தேவைப்படுகிறது.

வளர்ச்சிக்கு தேவை :எனவே, தேசத்தின் வலிமையை தேர்தல்களிலேயே செலவழிப்பதை விட்டுவிட்டு, வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பிரதமர் மோடிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது.


J.Isaac - bangalore,இந்தியா
18-ஜூன்-2019 19:59 Report Abuse
J.Isaac 43 % குற்றபிண்னனியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நம் நாட்டிற்கு தேர்தல் எனபது அர்த்தமற்றது
bal - chennai,இந்தியா
18-ஜூன்-2019 14:00 Report Abuse
bal நிச்சயம் சத்தியம்...இப்போது ஏன் வெவ்வேறு வருடங்களில் நடப்பதென்றால் அதற்கு காங்கிரெஸ்த்தான் காரணம்...அவர்கள் நினைத்தபோது ஆட்சியை கவிழ்த்தனர்...பின்னர் தேர்தல் இல்லேன்னா சுதந்திரத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது...இப்போதெல்லாம் ஆட்சி கவிழ்வதில்லை. அப்படியே ஆனாலும் கர்நாடகாவில் உள்ளது போல் ஆட்சி இருந்தால் நடக்கும்
18-ஜூன்-2019 09:58 Report Abuse
Nandha Kumar வரவேற்க வேண்டிய திட்டம்
daran -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-2019 09:04 Report Abuse
daran great idea
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-2019 08:54 Report Abuse
ஆரூர் ரங் தேர்தல் நன்னடத்தைவிதிகள் எனக்கூறிக்கொண்டு நாலைந்து மாதங்கள் அரசு இயந்திரத்தை முடக்கி கொள்கை முடிவுகளை எடுக்கவிடாமலடிக்கிறது தேர்தல் கமிஷன் .ஒரே ஆண்டுக்குள் சட்டசபை உள்ளாட்சி லோக்சபா தேர்தல்கள் வரும்போது முழு ஆண்டும் பாதிப்பு. இது பொருளாதார சரிவில் விடுகிறது .கட்சித்தாவல் தடை சட்டம் இருப்பதால் அரசு கவிழ்ந்து பொதுத்தேர்தல்கள் அடிக்கடி வருவது குறைந்துவிட்டது .ஒரே நேரத்தில் MP MLA தேர்தல்களை நடத்தினாலும் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்குகுமளவுக்கு மக்களுக்குப் பக்குவம் வந்துள்ளது தெரிகிறது. ஐந்து மதங்களுக்குமுன் 5மாநில சட்டசபைத்தேர்தல்களில் பாஜகவைதோற்கடித்த மக்களே இப்போது அதற்கு வாக்களித்துள்ளது மக்களின் முதிர்ச்சியைக்கட்டுகிறது (தமிழகம்கூட .ஒரு உதாரணம்) எனவே லோக்சபா தேர்தலுக்கு ஓராண்டு முன்னும்பின்னும் வாழ்நாளைப்பூர்த்தி செய்யும் சட்டசபைகளுக்காவதி ஒன்றாக தேர்தலை நடத்தலாம் .செலவும் கொள்கை முடக்குவாதமும் குறையும்
SIVARAM - Kochi,இந்தியா
18-ஜூன்-2019 07:51 Report Abuse
SIVARAM வோட்டு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் மோடியின் திட்டத்தை செயல் படுத்தலாம் இல்லையெனில் ஏவிஎம் முறைகேட்டில் பிஜேபி ஜெயிக்கும்
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-ஜூன்-2019 10:25Report Abuse
pradeesh parthasarathyவாக்கு சீட்டு முறைக்கு மாறுங்கள் ... ஆதரவு தருகிறோம் ......
Azhagan Azhagan - Chennai,இந்தியா
24-ஜூன்-2019 17:33Report Abuse
Azhagan Azhaganஉன் ஆதரவை யார் கேட்டார்கள்....
Azhagan Azhagan - Chennai,இந்தியா
24-ஜூன்-2019 17:39Report Abuse
Azhagan Azhaganகட்சி காரனே பேசாம இருக்கான் நீங்கல்லாம் யாரு. மொதல்ல கட்சி சாராத பொதுஜனமா இருந்து கருத்து போடு....
Achchu - Chennai,இந்தியா
18-ஜூன்-2019 07:05 Report Abuse
Achchu ஒரே தேர்தல் மில்லினியம் தேர்தல் அடுத்தது அடுத்த மில்லினியத்தில் பல்லாயிரங்கோடி மிச்சம்னு சொல்லிடலாம்
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-2019 06:17 Report Abuse
Mani . V நமக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், அதில் அடித்து ஆட ஐடி டீம் இருக்கும் பொழுது ஒரே தேர்தல் சாத்தியம் தான் ஜி.
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-2019 08:57Report Abuse
ஆரூர் ரங்உமக்கு மின்னணு பயித்தியமா? ஓரளவு தெலங்கானா கர்நாடகாவில் பெரு வெற்றிபெறமுடிந்த பாஜகவால் அருகிலுள்ள மாநிலங்களில் ஒரே ஒரு சீட் கூட வெல்ல முடியவில்லை ஆளும்கட்சியோடு கூட்டுவைத்தும் தோல்வி என்பதை யோசித்தீர்களா? அங்குமட்டும் பேப்பர் ஒட்டா போட்டார்கள்?...
Azhagan Azhagan - Chennai,இந்தியா
24-ஜூன்-2019 17:36Report Abuse
Azhagan Azhaganஇந்த புள்ளய யாராவது நல்ல மனநல டாக்டரிடம் காண்பிக்கவில்லை என்றால் சீக்கிரம் அடுத்தவனையும் சேர்த்து பைத்தியம் ஆக்கிடும்....
raman - Madurai,இந்தியா
18-ஜூன்-2019 00:27 Report Abuse
raman நல்ல கருத்து தான். முதலில் காலியான இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்தாமல், எந்த கட்சி உறுப்பினர் இறந்தாரா, அதே கட்சி வேறு ஒருவரை அனுப்பட்டும். தேர்தல் வேண்டாம். இது முடித்தால், ஒரே தேர்தல் சாத்தியம்
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூன்-2019 08:59Report Abuse
ஆரூர் ரங்இறந்த எம் எல் ஏ நல்லவராக வல்லவராக மக்களின் நன்மதிப்பைப்பெற்றவராக இருக்கலாம் .ஆனால் மாற்றுப் பிரதிநிதியாக ரவுடியை கட்சி நியமித்தால் அந்தத்தொகுதி மக்களின் கதி?...
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-2019 00:08 Report Abuse
Ramesh R இதன் மூலம் இந்த தமிழ் நாடு அரசு கலைக்கப்படும் என்றால் ஓகே
Azhagan Azhagan - Chennai,இந்தியா
24-ஜூன்-2019 17:37Report Abuse
Azhagan Azhaganமேலும் 2 வருடம் ஆட்சி நீடிக்கவே வாய்ப்புகள் அதிகம்....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)