ராகுலுக்கு தப்பான யோசனை: தமிழக தலைவரின் ‛‛சாதனை''

புதுடில்லி: காங்., தலைவர் ராகுலுக்கு அவரது நம்பிக்கைக்குரிய பிரவீன் சக்ரவர்த்தி என்பவர் சொன்ன தவறான யோசனைகள் தான், காங்., தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காங்., கட்சியின் புள்ளிவிபர பிரிவு தலைவர் தான் இந்த சக்ரவர்த்தி. தமிழகத்தை சேர்ந்தவர். (இவர் பெங்காலி என்று சிலர் தவராக நினைக்கின்றனர்). புள்ளி விபரங்களின் அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து இவர் தான் ராகுலுக்கு தகவல்கள் கூறுகிறவர். அதன் அடிப்படையில் தான் ராகுல் முடிவுகள் எடுப்பார்.

இவர் ராகுலுக்கு நெருக்கமானவர் என்பதால் அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தான் சக்ரவர்த்தியை ராகுலிடம் அறிமுகம் செய்து வைத்தார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கிற்கும் சக்ரவர்த்தி நெருக்கமானவர். டில்லியில் கார்த்திக் உடன் தான் சக்ரவர்த்தி சுற்றி வருகிறார்.தேர்தலுக்கு முன் ராகுலிடம் பேசிய சக்ரவர்த்தி காங்., கண்டிப்பாக 184 இடங்களில் வெற்றி பெறும் என்று புள்ளி விபரங்களுடன் கூறி உள்ளார். இதை ராகுலும் நம்பினார். (உண்மையில் கிடைத்தது 53 இடங்கள் மட்டுமே).
தவறான தகவல்களைக் கூறி ராகுலை தோல்வி பள்ளத்திற்குள் தள்ளி விட்டாலும் சக்ரவர்த்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் இவர் ராகுல் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.

இதுபற்றி மற்ற தலைவர்கள் ஆலோசித்தனர். ராகுலுக்கு நெருக்கமானவர்கள் அவரை எப்படி தவறாக திசை திருப்பினர்; யாரெல்லாம் இதில் ஈடுபட்டவர்கள் என்று விவாதிக்கப்பட்டது.சக்ரவர்த்தியின் தவறான வழிகாட்டுதலால் தான், ஸ்டாலின், அகிலேஷ், ஒமர் அப்துல்லா, சரத் பவார், தேஜஸ்வி யாதவ் போன்றவர்களை ராகுல் தொடர்பு கொண்டார். சிலர் காங்., உடன் கூட்டணியும் வைத்தனர்.
அடுத்த அரசு அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் தர வேண்டிய கடிதத்தைக் கூட ஒரு முன்னணி காங்., தலைவரும் வக்கீலுமானவர் தயாரித்துக் கொடுத்துவிட்டாராம். ஆட்சி அமைப்பது உறுதி என்ற நம்பிக்கையில் மே 24ம் தேதி டில்லி காங்., தலைமை அலுவலகத்தின் முன் கூடி வெற்றி விழா நடத்த 10 ஆயிரம் தொண்டர்களையும் தயார் செய்து விட்டனராம். கடைசியில் எதுவுமே நடக்காமல் போய்விட்டது.

இவ்வளவுக்குப் பிறகு விரக்தி அடைந்ததால் தான், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ராகுல் கூறினார் என்கிறது டில்லி வட்டாரம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)