ராகுல் சோனியா இல்லாமல் கூடிய காங்.,உயர்மட்ட குழு

புதுடில்லி ; காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா பங்கேற்காமல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் முக்கிய தலைவர்கள் கூடி 3 மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்து ஆலோசித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் ஆலோசனை :ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளது. இந்த சூழ்நிலையில், ராகுல் பங்கேற்காமல் இதர தலைவர்கள் கூடி புதுடில்லியில் தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில், சோனியா, பிரியங்காவும் கூட பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ரேபரேலியில் நடக்கும் லோக்சபா தேர்தல் ஆய்வு கூட்டத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சோனியா முடிவு ;இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில், '' இந்த கூட்டம் முழுக்க சட்டசபை தேர்தல்கள் குறித்தது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த முடிவை சோனியாவே எடுப்பார்,'' என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ராகுலின் ராஜினாமா, லோக்சபாவில் காங்கிரஸ் செயல்பாடு, கட்சியின் எதிர்காலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு :காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் கடிதம் அளித்துள்ள நிலையில், அவர் இல்லாமல், முக்கியத் தலைவர்கள் கூடிப்பேசியது, புதுடில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஜூன்-2019 18:56 Report Abuse
Natarajan Ramanathan பஞ்சாப் முதல்வரை தலைவராக்கலாம். இந்த சுர்ஜிவாலாவையும் ஒழிக்கனும்.
S A Sarma - Hyderabad,இந்தியா
12-ஜூன்-2019 18:38 Report Abuse
S A Sarma காங்கிரஸ் கட்சி இப்பொழுது ஒரு தேசிய அளவில் ஒரு மாநிலக் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னேற வேண்டுமென்றால் அது ஒரு தொண்டர்களின் கட்சியாக வளர வேண்டும். குடும்பக் கட்சி என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். ராகுல், சோனியா, பிரியங்கா அனைவரும் வெறும் கட்சி தொண்டர்களாக இருந்து, மற்ற இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். மோடியை திட்டுவதும், பா ஜா க வை சீண்டுவதும் ஒரு கொள்கையாக இருந்தால், காங்கிரஸ் கட்சி ஒரு மாவட்டக் கட்சியாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
sundarsvpr - chennai,இந்தியா
12-ஜூன்-2019 17:20 Report Abuse
sundarsvpr கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் தலைமை மட்டும் பொறுப்புஅல்ல. உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு. தொண்டர்கள் தலைமை தவறை சுட்டிக்காட்ட தயங்குவதால். தோல்விக்கு சோனியா ராகுல் பொறுப்பு ஏற்று பதவி விலகினால் ஏற்பதுதான் சரியான அணுகுமுறை. பொதுக்குழு கூட்டி தேர்தல் நடத்தவேண்டும். போட்டியில்லையெனின் பழைய தலைமை தொடருவது மக்கள் மனதில் ஒரு பட்டிமன்றம் நடக்கும். அதிலே ஒரு தீர்வு கிடைக்கும்.
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூன்-2019 16:55 Report Abuse
RajanRajan பப்புவின் இத்தாலி குடும்பம் கலைஞ்சுட்டுதோ.
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
12-ஜூன்-2019 16:45 Report Abuse
தமிழ் மைந்தன் ஊழலற்ற அந்தோணி தலைவரானால் காங்கிரஸ் மீண்டும் பிழைக்கும் வாய்ப்பு தெரிகிறது
Sathya Dhara - chennai,இந்தியா
13-ஜூன்-2019 07:37Report Abuse
Sathya Dhara அந்தோணி ஊஅழலற்றவர் ..ஆனால் ஊழல் சிகரமான குடும்பத்தை தூக்கி பிடித்துக்கொண்டு உலா வருகிறார். தைரியமாக கான் கிராஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே எதிர்ப்பை காட்டலாமே. தட்டி க்கேட்கலாமே. ஏன் செய்வதில்லை. மறைமுக ஒற்றுமை. வாடிகன் அடையாளம் பின்னணியில்அவ்வளவுதான்....
Thulasiraman Ramanujam - vellore,இந்தியா
12-ஜூன்-2019 16:44 Report Abuse
Thulasiraman Ramanujam All are dynasty appointed leaders.it is as good as family meeting
முகுந்தன் - குழித்துறை ,இந்தியா
12-ஜூன்-2019 16:41 Report Abuse
முகுந்தன் இவர்கள் கூடி ராகுல் காங்கிரஸ் தலைவராக தொடரவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றுவார்கள், அதை ஏற்று ராகுல் தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவார். நாடகமே உலகம்.....
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
12-ஜூன்-2019 16:40 Report Abuse
Balamurali Srinivasan அந்தோணி ,அஹ்மத் படேல் இவங்க ரெண்டு பேருமே சோனியாவோட கிட்சன் கேபினட் மெம்பெர்ஸ். டம்மி பீஸ் .சோனியாவோட ப்ரோக்ஸிஸ். அவ்வளவுதான். இவங்க ரெண்டுபேர் இல்லாமல் வேறு யாரவது வந்தால் தான் நம்ப முடியும்.
JIVAN - Cuddalore District,இந்தியா
12-ஜூன்-2019 16:51Report Abuse
JIVANஅப்போ யாரு நடத்தியிருந்தா தாங்கள் நல்ல இருக்கும்னு நினைக்கிறீங்க , அவங்களை பரிந்துரை செய்யுங்களேன் ....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
12-ஜூன்-2019 19:46Report Abuse
வல்வில் ஓரி தங்கபாலு அகில இந்திய தலைமை ஏற்று நடத்தியிருந்தா மட்டும் தான் காங்கிரஸ் பொழைக்க முடியும்.. அவ்ளோ தான் ..சொல்லிப்புட்டேன்...பரிந்துரையும் இங்கியே பண்ணியாச்சு...அப்புறம் கேக்குறதும் கேக்காததும் உன் இஷ்டம் ஜீவா...
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-ஜூன்-2019 16:35 Report Abuse
Cheran Perumal சோனியா காங்கிரஸ் தலைவராக இல்லை. ஆனால் தலைவராக யாரை நியமிப்பது என்று முடிவெடுப்பாராம். இதென்ன கட்சியா அல்லது குடும்ப விஷயமா?
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
12-ஜூன்-2019 16:32 Report Abuse
Bhagat Singh Dasan கேடுகெட்ட கட்சி
மேலும் 4 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)