தெலுங்கானா : கிராமங்களில் துளிர்விடும் பா.ஜ.,

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியே பெருவாரியான இடங்களை வென்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2வது இடத்தை பிடித்தாலும், கிராமப்புறங்களில் பா.ஜ., புதிதாக துளிர் விட்டுள்ளது.

ஆளுங்கட்சி அமோகம் :தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் 3 கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தலில், 539 ஜில்லா பரிஷத்களுக்கும், 5 ஆயிரத்தி 817 மண்டல் பரிஷத் இடங்களுக்கு ஓட்டுப்பதிவுகள் நடந்தன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் அமோகமான வெற்றியை ஆளுங்கட்சியே தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி பெற்றுள்ளது.

3வது இடத்தில் பா.ஜ.,உதாரணமாக கரீம்நகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 ஜில்லா பரிஷத் இடங்கிளல் 13 ஐ வென்றுள்ளது ஆளுங்கட்சி. அதேபோல 178 மண்டல் பரிஷத்களில் 77 ஐ வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மண்டல் பரிஷத்துகளில் 21 இடங்களை வென்றுள்ள நிலையில், புதிதாக பா.ஜ., 12 மண்டல் பரிஷத் இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக, டிஆர்எஸ் 446 ஜில்லா பரிஷத் 3556 மண்டல் பரிஷத்துகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 76 ஜில்லா பரிஷத் மற்றும் ஆயிரத்தி 377 மண்டல் பரிஷத்துகளை வென்றுள்ளது. பா.ஜ., 8 ஜில்லா பரிஷத்துகளையும், 211 மண்டல் பரிஷத்துகளையும் வென்று மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மீண்டும் அதிர்ச்சி ;அதே நேரத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போத்தங்கல் தொகுதியை ஆளுங்கட்சியான டி.ஆர்.எஸ்., இழந்துள்ளது. இந்தப்பகுதி உள்ளடங்கிய எம்.பி., தொகுதியில் நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலில் முன்னாள் எம்.பி.,யான முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவை, பா.ஜ., வேட்பாளர் தோற்கடித்துள்ளது, குறிப்பிடத்தக்கதாகும்.வழக்கம் போல இந்த கிராமப்புற பகுதிகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி மற்றும் இ.கம்யூ., மா.கம்யூ., கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு