விவசாயி தற்கொலை : ராகுல் -பினராயி மோதல்

திருவனந்தபுரம் : வங்கி கடன் வாங்கி கட்டமுடியாமல் வயநாட்டில் தற்கொலை செய்து கொண்டது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார். அவருக்கு காரசாரமாக பினராயி பதில் கூறியுள்ளார்.


வயநாடு தொகுதிக்குட்பட்ட தினேஷ்குமார் என்ற விவசாயி கடன் தொல்லை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராகுல் பினராயிக்கு எழுதிய கடிதத்தில், இப்பிரச்னையில் கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2018 வெள்ள பாதிப்புகளை மனதில் கொண்டு பிரச்னை நிரந்தரமாக தீரும் வகையில் அரசு செயல்படவேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

கடந்த மே 31 அன்று வந்த கடிதத்திற்கு உடனடியாக பதிலளித்துள்ள பினராயி விஜயன், '' வயநாடு எம்.பி., கோரிக்கையை ஏற்று, கலெக்டரிடம் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். ஆனால், வங்கிகள் வணிகக்கடன் தருவது, வசூலிப்பது குறித்து 'சர்பேய்சி சட்டம்' என்ற ஒன்று உள்ளது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இங்கு கேரளாவில் நாங்கள், விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாடுமுழுவதும் விவசாயிகள் கடன் பிரச்னையினால் தற்கொலை செய்வது அதிகரித்து வுருகிறது. எனவே, ராகுல் இப்பிரச்னையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். அங்கு நாங்கள் குரல் எழுப்பும்போது, ராகுலும் எங்களுடன் இணைந்துகொள்வார் என்று நம்புகிறேன்,'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வர் பினராயி, இப்படி டிவிட்டரில் பதிலடி கொடுத்திருப்பதால், அங்கு காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்குமான வார்த்தைப்போர் அதிகரித்துள்ளது.


nicolethomson - bengalooru,இந்தியா
02-ஜூன்-2019 04:32 Report Abuse
 nicolethomson அது சரி கம்யூனிஸ்டுகள் இப்போ கருநாடகத்தை இஞ்சி சாகுபடி என்ற பெயரில் சுருட்டிக்கிட்டு போறாங்க , இந்த நிலையில் கேரளாவில் ஒரு விவசாயியா? நம்புறா மாதிரியா இருக்கு , அதுவும் பிணத்தை வைத்து அரசியல் செய்யும் இந்த சூழ்நிலை வேறெப்போதும் ஏற்படக்கூடாது
madhavan rajan - trichy,இந்தியா
01-ஜூன்-2019 21:24 Report Abuse
madhavan rajan மத்திய அரசிடம் என்ன பொறுப்பு இருக்கிறது, மாநில அரசிடம் என்ன பொறுப்பு இருக்கிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அவர் ஏன் வயநாட்டில் வந்து தேர்தலில் போட்டியிடப் போகிறார். அது தெரியாமல் ரபேல் பற்றியெல்லாம் பொய் கூறியதால்தான் அவருடைய கட்சிக்கு இந்த நிலைமை வந்திருக்கிறது அதுவும் தமிழ்நாடும், கேரளாவும் கை கொடுத்ததால். வயநாட்டு மக்களுக்காக ஒரு கடிதமாவது இழுத்தினாரே என்று மிக்க மகிழ்ச்சி. அமேதி மக்களுக்கு அதை கூட செய்ததாக தெரியவில்லை.
01-ஜூன்-2019 19:20 Report Abuse
kulandhai Kannan விவசாயிகளைப் பொறுத்தவரையில், கடன் வழங்குவது சரி, வசூலிப்பது தவறு. பூமிக்கடியில் கெயில் குழாய் பதிப்பது தவறு, பூமிக்கு மேல் மின்கம்பி செல்வது தவறு.
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
01-ஜூன்-2019 18:53 Report Abuse
tamilan கேரளாவில் விவசாயமா? கடன் காரணமாக தற்கொலையா? விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய திட்டங்களை தடுத்தால் விவசாயி பொது மக்களும் சேர்ந்து தற்கொலை செய்ய வேச
RajanRajan - kerala,இந்தியா
01-ஜூன்-2019 18:05 Report Abuse
RajanRajan சேட்டன்மார்கள் மாறி மாறி ஆப்பு அடிச்சுக்குவாங்களோ.
01-ஜூன்-2019 17:42 Report Abuse
Kannan Vel இது நல்ல செய்திதானே இதில் போர் ஒன்றும் இல்லை
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
01-ஜூன்-2019 17:36 Report Abuse
சிவ.இளங்கோவன் . இதில் மோதல் ஒன்றுமில்லை மலரே .. ஆட்சி பொறுப்பேற்ற பாஜக தான் இதற்கு உரிய நிவாரணங்களையும் , தற்கொலைகளையும் தடுக்க வேண்டும் .
sankar - ghala,ஓமன்
01-ஜூன்-2019 17:34 Report Abuse
sankar கேரளா வில் விவசாயியா , அவன் எப்போது விவசாயம் பண்ண ஆரம்பித்தான் , அவன்னுக்கு தெரிந்த எல்லாம் சாயா கடை தானே .
01-ஜூன்-2019 17:34 Report Abuse
S B. RAVICHANDRAN பப்பு வயநாட்டில் கொசு தொல்லை அதிகம் வா வந்து போராடு.
Anand - chennai,இந்தியா
01-ஜூன்-2019 16:23 Report Abuse
Anand இவனுங்க ரெண்டுபேரும் என்னமா பித்தலாட்டம் செய்யறாங்கன்னு பாருங்க மக்களே.. ஒருவன் மாநில முதல்வன், இன்னொருவன் அந்த தொகுதி எம்பி, ஆனால் கடேசியில் மத்திய அரசின் மேல் பழி சுமத்துகிறார்கள் இந்த இழிபிறவிகள்.
மேலும் 5 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)