தமிழகத்தின், முதல் பெண் எம்.எல்.ஏ., சவுந்தரம் ராமச்சந்திரன்.பிரபலமான, டி.வி.எஸ்., நிறுவனத்தை தொடங்கிய, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் மகள். 1904ல் பிறந்த இவர், சமூக சீர்த்திருத்தவாதி, அரசியல்வாதி, மருத்துவர் என, மூன்று பரிமாணங்களில் பணியாற்றினார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, மஹாத்மா காந்தியின் அரிஜன இயக்கத்தில், தீவிரமாக பங்கேற்ற ராமச்சந்திரன் என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். திண்டுக்கல் அருகே காந்தி கிராமம் உருவாக காரணமாக இருந்தவர். 1952 சட்டசபை தேர்தலில், ஆத்துார் தொகுதியில், காங்., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்து, 1957 சட்டசபை தேர்தலில், வேடசந்துார் தொகுதியில் இருந்தும், 1962 லோக்சபா தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, மத்திய கல்வித் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றுள்ளார். 1984ல் மறைந்தார்.
வாசகர் கருத்து