அமித்ஷாவுக்கு பதில் நட்டா ஏன்?

புதுடில்லி : பா.ஜ., தேசிய தலைவராக இருந்த அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட உள்ளார். பா.ஜ.,வை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ள அமித்ஷா வகித்து வந்த கட்சி தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட வேண்டும். முந்தைய மோடி அரசில், மோடியின் ஆயுஷ்மான் பாரத், அரசு சுகாதார காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்தும் பொறுப்பே நட்டாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.2014 தேர்தலின் போது உ.பி., பா.ஜ., பொறுப்பாளராக நட்டா நியமிக்கப்பட்டிருந்த போது, 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும் என அமித்ஷா இலக்கு நிர்ணயித்திருந்தார். இலக்கை அடைய கடுமையாக உழைத்த நட்டாவின் தீவிர பிரசாரத்தால் 49.6 சதவீத ஓட்டுக்கள் கிடைத்தது. அந்த தேர்தலில் உ.பி.,யில் பா.ஜ., 62 இடங்களை கைப்பற்றியது.சட்டம் படித்தவரான நட்டா, 2012 ம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். 2014 ல் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கும், பா.ஜ., பெரும்பான்மையை நெருங்கும் அளவிற்கும் வெற்றி பெற்றதற்கு நட்டாவே முக்கிய காரணம்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் பீகார் மற்றும் குஜராத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக அமைந்ததும் நட்டா தான். இதனால் தென் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தவே நட்டாவிடம் கட்சி தலைமை பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)