உளறு வாய்களை ஓரங்கட்டிய மோடி

புதுடில்லி : முந்தைய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பல அமைச்சர்களை இந்த முறை ஓரங்கட்டி உள்ளார் பிரதமர் மோடி. இதற்கு காரணம், தேர்தல் சமயத்தில் அவர்கள் பேசிய சர்ச்சை பேச்சு தான்.


மேனகா முதல் அனந்த்குமார் ஹெக்டே வரை பலரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முந்தைய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையை கவனித்து வந்த மேனகாவிற்கு இந்த முறை எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. தற்காலிக சபாநாயகராக மட்டும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உ.பி.,யின் சுல்தான்புர் தொகுதியில் போட்டியிட்ட மேனகா, தேர்தல் பிரசாரத்தின் போது, தனக்கு ஓட்டு போடாவிட்டால் வெற்றி பெற்ற பிறகு இஸ்லாமியர்களுக்கு என எதுவும் செய்ய மாட்டேன் என பேசி இருந்தார். சர்ச்சைக்குரிய வகையில், பிரிவினையை ற்படுத்தும் விதமாக பேசிய மேனகாவிற்கு தேர்தல் கமிஷனும் தற்காலிக தடை விதித்திருந்தது. மேனகாவின் இந்த பேச்சை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.


மேனகாவை போல் மோடியின் முந்தைய அமைச்சரவையில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் ஹெக்டேவிற்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர் என்ற பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாகூரின் பேச்சை சரி என ஆமோதித்து பேசியதுடன், கோட்சேவின் செயலை சரி என குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை அடுத்து தனது டுவீட்டை அவர் நீக்கினார். இவர் காங்., தலைவர் ராகுல் குறித்தும் சர்ச்சை கருத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது போல் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பலருக்கும் அமைச்சர் பதவி வழங்காமல் மோடி ஓரங்கட்டி உள்ளார்.


oce - chennai,இந்தியா
01-ஜூன்-2019 13:54 Report Abuse
oce உளறுவாயன்கள் அரசியல் பொதி சும்பபவர்கள்.
BOBBTY - Chennai,இந்தியா
01-ஜூன்-2019 11:57 Report Abuse
BOBBTY மிகவும் நேர்மையான karuthu. காணாமல் போன வாக்கு பதிவு இயந்திரத்துக்கு கணக்கு SOLLUM.
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மே-2019 18:13 Report Abuse
J.V. Iyer இதுபோன்ற நேர்மையான, நாணயமான, சுத்தமான கட்சியை பார்ப்பது அரிது.
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மே-2019 17:57 Report Abuse
அசோக்ராஜ் உளறுவாயர்களால்தான் ஓட்டு எண்ணிக்கை அபரிமிதமாக கூடி 303- தொகுதிகள் கிடைத்தன. நன்றி மறப்பது நன்றன்று.
chakra - plano,யூ.எஸ்.ஏ
31-மே-2019 17:44 Report Abuse
chakra மேகத்தில் மறைந்து தாக்குதல் நடத்த சொன்ன உளறு வாயனை என்ன செய்வது
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 18:38Report Abuse
வல்வில் ஓரி கதைவை...
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
01-ஜூன்-2019 11:58Report Abuse
கல்யாணராமன் சு.சக்ரா, விமானப்படை முன்னாள் தளபதி ஒருவர் கொடுத்த நேர்காணலை தாங்கள் படிக்கவில்லை என்பது நன்றாக தெரிகிறது ...... அதை படித்துவந்து பிறகு உங்களுடைய இந்த கமெண்டை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .............
Darmavan - Chennai,இந்தியா
01-ஜூன்-2019 12:42Report Abuse
DarmavanUSA வில் இருந்து கொடு ஏதாவது தெரிந்தால் பேசு இல்லையேல் பேசாமலிருப்பது மேல். உளற வேண்டாம்....
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-மே-2019 16:31 Report Abuse
நாஞ்சில் சுலைமான் One more ped loose tongue was Alphonse kannanthanam...
S.Ganesan - Hosur,இந்தியா
31-மே-2019 16:28 Report Abuse
S.Ganesan இதே போல மற்ற உளறுவாய்களையும் ஒதுக்கி வைத்தால் நல்லது . உதாரணம் - எட்டியூரப்பா,
Peter Durairaj - Subang Jaya,மலேஷியா
31-மே-2019 16:44Report Abuse
Peter Durairajஉளறுவாய்களின் உதட்டை வெட்டி ஊறுகாய் போட வேண்டும்....
V Gopalan - Bangalore ,இந்தியா
31-மே-2019 16:07 Report Abuse
V Gopalan At least now, the BJP should ensure the second/third rank leaders keep their mouth shut lest the image and the difficulties with which PM took second innings will prove worst than ever.
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-2019 16:04 Report Abuse
Endrum Indian கரையான்கள் உள்ளிருந்தே அழிப்பவை உதாரணம் இந்தியாவில் திராவிட/பாவாடை/பச்சை கட்சிகள், இது இருக்கிறவரை ஏழையாக இருக்கும் திராவிட /பாவாடை/பச்சை மக்கள் அப்படியே தானிருப்பார்கள். அவர்கள் ஸ்டேட்டஸ் மாறவே மாறாது . இது 1000 % உறுதி .
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 15:32 Report Abuse
வல்வில் ஓரி எனக்கெல்லாம் ..பிஜேபி தொண்டன் என்கிறதை விட..தி மு க எதிரி ன்கிற கர்வம் தான் அதிகம்.. அந்த கட்சியை புழுதி மூடுற வரை விடக்கூடாது இல்லேன்னா கரையான் மாதிரி அரிச்சிக்கிட்டே இருக்கும்.
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-மே-2019 17:04Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்நீ என் இனம் நண்பா...
மேலும் 3 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)