அமேதி தோல்வியை ஆராய குழு: ராகுல் அமைத்தார்

புதுடில்லி : அமேதி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு குழுவை அனுப்புகிறார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல், உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.,வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு தோல்வியடைந்தார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே வென்றது. அமேதி, கேரளத்தின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், வயநாட்டில் மட்டும் வெற்றிபெற்றார்.

இதனால், காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் உள்ளார். ஆனால், அவரது முடிவை மாற்றுக்கொள்ளும்படி காங்கிரஸ் தலைவர்களும், லாலு, ஸ்டாலின், குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, நேருவின் குடும்பத்திற்கு பாரம்பரியமாக வெற்றியை அளித்து வந்த அமேதியில், ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக காங்., அகில இந்திய செயலாளர் ஜூபைர் கான் மற்றும் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா ஆகியோரை நியமித்துள்ளார்.

இந்தக் குழு அமேதிக்கு நேரில் சென்று, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து எவ்வளவு விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அறிக்கை தரவேண்டுமென ராகுல் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.


Sitaraman Munisamy - SALEM,இந்தியா
01-ஜூன்-2019 11:01 Report Abuse
Sitaraman Munisamy உங்கள் தோல்வி ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் இந்த தொகுதிக்கு எத்தனை முறை சென்றீர்கள். நீங்கள் தத்து எடுத்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள். அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் தோல்வி அடைந்த ஸ்ம்ரிதி ராணி எந்த அளவுக்கு தான் வெற்றி பெற பாடு பட்டுள்ளார் என்பதை முக்கியமாக கவனிக்கவும். நீங்கள் தோற்பது உறுதி என்பதால்தானே வயநாடு தொகுதிக்கு செண்றீர்கள்
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மே-2019 18:46 Report Abuse
அசோக்ராஜ் குடியுரிமை நோட்டிசுக்கு இன்னும் பதில் போகல்லே. அமீத்து வேற உள்துறைக்கு வண்ட்டாரு. காப்பு விழப்போவுது. இந்த நேரத்துல அமேதியில ஆராய்ச்சியாம். இத்தாலிக்கு எஸ்கேப் ஆவுறதுதான் ஒரே சாய்ஸ்.
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-2019 16:37 Report Abuse
Endrum Indian ஒரு குழு ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம், நீ உன்னை மனிதனாக மாற்றிக்கொள், பிறகு வெற்றி கிடைக்கும், அது வரை இப்படித்தான் புரியாமலே இருந்து விடுவாய்???உன் அதிர்ஷ்டம் பாகிஸ்தான் வயநாடு உனக்கு கைகொடுத்தது.
Ambika. K - bangalore,இந்தியா
31-மே-2019 15:44 Report Abuse
Ambika. K ராவுலஜி இதுக்கு எதற்க்காக ஆய்வு ஆராய்ச்சி எல்லாம் ஒங்களுக்கு விழுந்த ஓட்டுக்களை விட அம்மிணிக்கு 55000 ஒட்டு அதிகம் விழுந்துருக்கு அதான் காரணம் 5 வருஷத்துக்கு ஒரு தபா தொகுதிக்கு போனா இதான் கஷ்டம். அடுத்து என்ன அமேதி தொகுதியை பாத்து ராய்பரேய்ல்லி யும் புட்டுக்கும் ஒங்களுக்கு வயநாடு அம்மாவுக்கு மலப்புரம்
Vettri - Manila,பிலிப்பைன்ஸ்
31-மே-2019 15:20 Report Abuse
Vettri உங்களின் தோல்விக்கு காரணம் உங்களின் நம்பிக்கை இன்மையே. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஏன் வய நாட்டில் நிற்கவேண்டும்?
swega - Dindigul,இந்தியா
31-மே-2019 15:13 Report Abuse
swega காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். உங்கள் ஜால்றாக்களை வைத்து குழு அமைத்தால் அவர்களால் தோல்விக்கு முழுக்காரணம் நீங்கள் தான் என எப்படி உங்களிடமே கூறமுடியும்?
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 14:28 Report Abuse
வல்வில் ஓரி ஹிந்து ராம் வெச்சிருந்த பிட் பேப்பரை வாங்கி பரிச்சை எழுதிய ராகுல் பெயிலாயிட்டார்....அந்த பிட் பேப்பர் மூணாம் கிளாஸ் சிலபஸ் ல இருந்து உருவினதாம்...ராகுல் எழுதினது ஐ ஏ எஸ் .. பிட் பேப்பர்ல "ரபேல் ஒரு ஏரோபிளேன் ஹோலண்டே ஒரு முன்னாள் பிரெஞ்சு ப்ரெசிடெண்ட் " ன்னு மட்டும் தான் இருந்ததாம்.
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 14:15 Report Abuse
வல்வில் ஓரி நீ தோத்தது ஏன் ன்னு தெரிய வரும்
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
31-மே-2019 14:08 Report Abuse
வல்வில் ஓரி உனக்கு இனிமே வயநாட்டை விட்டால் வேற கதி இல்லை ..
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
31-மே-2019 13:54 Report Abuse
Idithangi நம்ப சுடலையை வைத்து ஒரு கம்மிட்டி போட்டு இருந்தா தோல்விக்கான காரணத்தை சும்மா புட்டு புட்டு வெச்சிருவாரு.
மேலும் 17 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)