சில காட்சிகளும், கதைகளும் நுாறாண்டை கடந்தாலும் மாறாது. அந்த காலகட்டத்திற்கு அப்படியே பொருந்தும். நம்ம, எம்.ஜி.ஆர்., ஒரு படத்துல மக்கள்கிட்ட பேசுவாரு.
'பணம் வந்தா பசிய தீர்க்குமுங்க' என, ஒரு அப்பாவி சொல்ல, 'சரி ஓட்டு போட பணம் எவ்வளவு கொடுப்பாங்க'னு, எம்.ஜி.ஆர்., கேப்பாரு.'அஞ்சு கொடுப்பாங்க. சில சமயம், 10 ரூபா கூட குடுப்பாங்க…'தலையை சொறிந்து கொண்டே சொல்வார், அந்த அப்பாவி.'அது எத்தனை நாளைக்கு...?'- 'ஸ்டைலா' கைகட்டி கேப்பார் எம்.ஜி.ஆர்.,'ஒருநா, ரெண்டு நாளைக்கு வரும்'பார் அப்பாவி.
'அப்புறம்… வருஷம் பூரா என்ன பண்ணப் போற...? பசிய தீர்க்கிறவங்களா பாத்து ஓட்டு போடு'ம்பார். அப்போ ஓட்டுக்கு குடுத்த, 10 ரூபா, ரெண்டு நாளைக்கு பசியாத்துச்சுன்னா... இப்போ குடுக்குற ஆயிரம் ரூபா, நாலு நாளைக்கு பசியாத்தும்.எந்த கட்சியுமே, பசிய நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்தப் போறேன்னு சொல்லல.
ஏற்கனவே, 'கொரோனா' அலைல சிக்கி, பாதி பேர் வேலையில்லாம இருக்காங்க. 'எலக் ஷனுக்கு' அப்புறமும், இந்த கட்சிகளால பஞ்சம், பசிய தீர்க்க முடியாது. அடுத்த, எலக் ஷன்லயும் அள்ளி விடுவாங்க; அவ்ளோதான்.
வாசகர் கருத்து