மத்திய அமைச்சரவையில் 4 கர்நாடக எம்.பி.,க்கள்

புதுடில்லி : இன்று (மே 30) மாலை பதவியேற்க உள்ள பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 எம்.பி.,க்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 2 பேர் முந்தைய மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் இருந்து எம்பியான சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. இவர்கள் தவிர ஹூப்ளி மாவட்டம் தர்வத் தொகுதி எம்.பி., பிரல்ஹத் ஜோஷி மற்றும் பிலாகவி எம்.பி., சுரேஷ் அங்கடி ஆகிய 2 பேருக்கும் இன்று மாலை மோடியை சந்திக்க வர அழைப்பு வந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து இவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் ஜோஷி மற்றும் அங்கடி ஆகிய இருவரும் கர்நாடகாவில் இருந்து 4 வது முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்கள். உத்தர கன்னடா எம்.பி., அனந்த் குமார் ஹெக்டே இவர்களை அனைவரையும் விட கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர். ஆனால் மத்திய அமைச்சரவையில் இவர் இடம்பெறுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஹெக்டே, மோடியின் முந்தைய அமைச்சரவையில் திறன் மேம்பாட்டு துறை இணையமைச்சராக இருந்தவர்.


J.Isaac - bangalore,இந்தியா
31-மே-2019 10:16 Report Abuse
J.Isaac நிர்மலா சீதாராமன் பிராமணர்
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
01-ஜூன்-2019 12:08Report Abuse
கல்யாணராமன் சு.அதனாலே??.............
meenakshisundaram - bangalore,இந்தியா
09-ஜூன்-2019 04:49Report Abuse
meenakshisundaramஅதனாலே Isaac ராத்திரி தூக்கம் வாராமே அழுதுகிட்டு இருப்பாரு ?...
Siva - Aruvankadu,இந்தியா
30-மே-2019 17:11 Report Abuse
Siva எல்லாம் இலவசமாக கிடைக்கும் என்று நம்பி தானே ஓட்டு போட்டோம்.. நீங்க உழைத்து வாழனும் என்று சொன்னால் எப்படி ? வேர்க்குமே.....
Bala - Chennai,இந்தியா
30-மே-2019 16:12 Report Abuse
Bala எந்த தொகுதியில கெலிச்சு முன்வாசல் வழியா பிரதமர் ஆனாரு?
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-2019 16:10 Report Abuse
JEYAM தமிழன் JEYAM பாஜகவுக்கு ஒருதுரும்பை கூட எடுத்துப்போடாத நிர்மலாசீதாராமன் போன்றவர்களுக்கு பதவி கொடுப்பதற்கு பதில் சுனில் அரோரா க்கு பதவி கொடுக்கலாம்...
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 16:13Report Abuse
வல்வில் ஓரி ஒரு வேலையும் உருப்படியாத பண்ணாத ராகுலுக்கு கூட தலைவர் பதவி .குடுத்த பயலுக இப்ப வந்து அடுத்த ஊட்டுல யாரு அப்பா. யாரு அண்ணன ன்னு சொல்லிக்கிட்டு திரியுறானுங்க.....
Sathya Dhara - chennai,இந்தியா
30-மே-2019 16:30Report Abuse
Sathya Dhara தெரிந்து கொள்ளுங்கள்...
rambo - Manamadurai,இந்தியா
30-மே-2019 17:09Report Abuse
ramboராகுல் காந்தி இரண்டு முறை மக்களால் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. 20 ஆண்டுகாலம் அரசியலில் இருப்பவர்.. அவர் தலைமையில் காங்கிரஸ் நான்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.. இந்த நிர்மலா ஒரு முறையாவது எலெக்ஷனில் நின்றிருக்கிறாரா?? பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் கட்சியில் சேர்ந்து 6 வருடத்தில் பாதுகாப்பு அமைச்சர்.....
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-2019 17:43Report Abuse
Chowkidar NandaIndia//ராகுல் காந்தி இரண்டு முறை மக்களால் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. 20 ஆண்டுகாலம் அரசியலில் இருப்பவர்// எல்லாம் சரி. ஆனால் அவர் பின்புலம் என்ன? நேரு குடும்பத்தின் வாரிசு என்கிற மிகப்பெரிய பின்னணி அவருக்குள்ளதே. கான்க்ராஸ் கட்சியில் எத்தனையோ அனுபவசாலிகள், பெரும் தலைகள் இருக்கையில் இவர் கட்சியில் தலைவரானது வாரிசு என்பதால் தானே? இதை நீங்கள் மறந்து விட்டீர்களே. அந்த தகுதி நிர்மலாவிற்கு இல்லையே. அவர் ஒரு சாதாரண பெண்மணி தானே. ராகுலுக்கு இருக்கும் பின்புலம் நிர்மலாவிற்கு இல்லையே? இதுவல்லவோ இருவருக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம்....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 17:48Report Abuse
வல்வில் ஓரி நீ தள்ளுபடிக்கு தானே ஒட்டு போட்ட..? உனக்கென்ன அருகதை இருக்கு..பிஜேபி யாரை மினிஸ்டரா வெக்கணும் ன்னு சொல்ல?...
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 17:51Report Abuse
வல்வில் ஓரி ராகுல் மக்களால் தேர்ந்தெடுக்க பட ராகுல் பிறப்பு தான் காரணம் .. இல்லை ன்னு சொல்லு பாப்போம்? ராகுலை விட திறமையானவர் பல ஆயிரம் பேர் வாய்ப்பில்லாமல் இந்தியாவில் இருக்கிறார்கள்.. நிர்மலா கட்சியில் சேந்து ஆறு வரூடத்தில் அமைச்சர் ன்னா நீயே அவர் திறமைசாலி ன்னு ஒத்துக்கிட்ட.. போ . போ..கூட்டம் போடாதே....
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-2019 16:07 Report Abuse
JEYAM தமிழன் JEYAM தமிழ்நாட்டை பற்றி நீ கவலைப்படாதே... பாஜகவுக்கு ரோஷம் என்ற ஓன்று இருந்தா பாஜகவை ஓடஓடவிரட்டிய தமிழகத்துக்கு மந்திரி பதவி கொடுக்காமல் இருக்கவேண்டுமானால் சொல் தம்பி... நேர்மையற்ற முறையில் ஒருதலைப்பட்சமான ஆட்டத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளருடன் மானமுள்ள தமிழன் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபடமாட்டான்
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
30-மே-2019 16:31Report Abuse
sankarமானமுள்ள எதிர்க்கட்சி தமிழன் எவனும் அஞ்சு வருசத்துக்கு கருத்து சொல்ல வரமாட்டான் .ஆனா நீங்க …....
Sudarsanr - Muscat,ஓமன்
30-மே-2019 16:34Report Abuse
Sudarsanrநீ ஒருவன் மற்றும் உன்னை போல உள்ள சில புல்லுருவிகள் மட்டும் இந்தியர்கள் அல்ல... மோடி அவர்களின் வெற்றியை ஜீரணம் செய்ய இயலவில்லை என்றல் ஜீரண மருந்து குடி.. அல்லது உன் தலைவனோடு சேர்ந்து எங்கேனும் சென்றும்.. மனதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்... தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் நடக்காத ஒன்றை நடந்தது போல் திரித்து பேசாதே.. அப்படி பேசி பேசித்தான் உன் தலை வெறும் 52 ல் நிற்கிறான்... பதட்டப்படாமல்... உக்கார்ந்து யோசித்து பார்.....
30-மே-2019 16:34Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்தோல்வி துக்கத்தில் என்னென்னவோ உளறுகிறான் இவன் . பெயரையாவது தாய் தகப்பன் வைத்த பெயரை வைக்கலாம்....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 16:45Report Abuse
வல்வில் ஓரி இதை எட்டு கோடி செலவழிச்சு போலி கடன் தள்ளுபடி வாக்குறுதி கொடுத்து செயிச்ச தீம்கா எம்பி யோ இல்லை அந்த அடிமைகளின் தலைவனோ சொல்லட்டும்.. நீ யாரு..வேண்டாம் ன்னு சொல்ல..?...
நேர்கொண்ட பார்வை - Chennai,இந்தியா
30-மே-2019 17:35Report Abuse
நேர்கொண்ட பார்வைநீ யாரு இதை சொல்ல? வல்வில் ஓரி என்று பெயரை பார்த்த உடனே புரிந்துவிட்டது நீ ஒரு ஒப்பாரி வைப்பவன் என்று...
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
30-மே-2019 16:00 Report Abuse
pradeesh parthasarathy தேர்தலே சந்திக்காத பின் வாதில் வழியாக நுழைய முயலும் கேரளாவின் அல்போன்ஸ் கண்ணம்தானாம் , மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்போது , தமிழகத்தில் பிஜேபி யை வளர்த்த பொன்னாருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ...
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 16:09Report Abuse
வல்வில் ஓரி சார் கேரளாவுல தான் ஒட்டா..? அப்போ நெய்யாற்றின்கரை யோட ஒங்க ஆட்சி எல்லை முடியுது....அங்கே எல்லாரையும் ஷேமமா ரட்ஸியுங்கோ..முதலில்.. இதே வாய் தான் பொன்னாரை கழுவி ஊத்தியது....
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-2019 16:28Report Abuse
Chowkidar NandaIndiaஅப்போது கான்க்ராஸ் ஆட்சியில், லத்தூரில் சிவசேனாவிடம் படுதோல்வி கண்ட ஷுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சரானது எப்படியோ? தேர்தலையே சந்திக்காமல் மவுனகுரு பத்து வருடங்கள் பிரதமராக இருந்தது எப்படியோ?...
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-மே-2019 21:45Report Abuse
கல்யாணராமன் சு.அமைச்சரான ஆறு மாதங்களுக்குள் மேல் சபையிலோ அல்லது கீழ் சபையிலோ உறுப்பினர் ஆகவேண்டும் என்பதோ, அந்த சபைகளில் உறுப்பினர் ஆவதற்கு தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதோ, தங்களுக்கு தெரியாததா, திரு. Pradeesh Parthasarathy - Mylapore,இந்தியா ? .......................
rajangam ganesan - lalgudi,இந்தியா
31-மே-2019 10:09Report Abuse
rajangam ganesanமயிலாப்பூர் அறிவாளி எல்லோரும் முன் வாசல் வழி வந்தால் ராஜ்ய சபா mp எப்படி தேர்வு செய்வது...
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 15:38 Report Abuse
வல்வில் ஓரி நாம் எல்லாம் நல்லாருக்கும் போதே கான்கிராஸை வேற ஒரு நல்ல குணமுள்ள தேசப்பற்று உள்ள சாமானியன் தலைமை தங்கி நடந்தூரத்தை பார்க்கோணும்.. தமிழ் நாட்டுல திமுக ன்னு ஒரு இந்து விரோத குடும்ப கட்சி இருந்தது ஆனா இப்பம் இல்லை ன்னு மக்கள் பேசணும் ஆஹா...கேக்கவே ...இன்பமாய் இருக்குதைய்யா//
Sudarsanr - Muscat,ஓமன்
30-மே-2019 16:30Report Abuse
Sudarsanrஅந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் ... கனவு நிறைவேறுமா......
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 15:25 Report Abuse
வல்வில் ஓரி மோடி சார்...தமிழ் நாட்டுக்கு எதுனா தள்ளுபடியில் குடுப்பீங்களா..? நாங்க தள்ளுபடியை நம்பி தான் ஒட்டு போட்டோம்..
Sanjay - Chennai,இந்தியா
30-மே-2019 16:01Report Abuse
Sanjayநாங்க எல்லாம் அயோக்கியர்கள் பேச்சை கேட்டு கோ பாக் மோடி என்று தான் கூறுவோம்...
சீனி - Bangalore,இந்தியா
30-மே-2019 16:13Report Abuse
சீனிஓபிஸ் மகனுக்கு அமைச்சர் சீட் புக் ஆகிவிட்டது....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)