மோடி பதவியேற்பு : காசியில் 200 பேருக்கு அழைப்பு

வாரணாசி : இன்று (மே 30) நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அவரது சொந்த தொகுதியான வாரணாசியை (காசி) சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்த 4 பேர் உட்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பாரம்பரிய இசைக் கலைஞர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஜோதிடர்கள், மத குருமார்கள், தொழிலதிபர்கள், பா.ஜ., எம்எல்ஏ.,க்கள், உள்ளிட்டோரும் இதில் அடங்குவர். காசி பகுதி பா.ஜ., செய்திதொடர்பாளர் நவ்ரதன் ரதிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு அனுப்பப்பட்ட அனைவரும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அழைப்பு அனுப்பப்பட்டுள்ள காசியை சேர்ந்த 200 பேரில் பலரும் பத்ம விருதுகள் பெற்றவர்கள் ஆவர். பல்கலை., துணைவேந்தர்கள், காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள், உ.பி., மருத்துவ கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)