மோடி - அமித்ஷா 3வது நாளாக ஆலோசனை

புதுடில்லி : மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பா.ஜ., தலைவர் அமித்ஷா தொடர்ந்து மூன்றாவது நாளாக, ஆலோசித்து வருகிறார்.

எண்ணிக்கை எத்தனை ? :பிரதமர் மோடி, 2வது முறையாக இன்று (மே 30) மாலை 7 மணியளவில் பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. இதில் இடம்பெற வேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கை, யார் யாருக்கு எந்த அமைச்சர், கேபினட்டில் இடம்பெறுபவர் யார், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை பதவி? என்பது குறித்தெல்லாம், 3 வது நாளாக அமித்ஷா மோடியுடன் ஆலோசித்து வருகிறார். பிரதமர் மோடி இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது.


பா.ஜ., இந்தமுறையும் 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளையும் இணைத்தே மந்திரி சபையை அமைக்க முடிவு செய்துள்ளது. சிவசேனா, சிரோண்மனி அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

சிவசேனா :இந்நிலையில், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சிவசோனா கட்சியின் நிர்வாகி சஞ்சய் ராவத் பேட்டியளித்துள்ளார். டில்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-2019 12:16 Report Abuse
JEYAM தமிழன் JEYAM நாக்பூர் தவறு செய்கிறது.. 20 வருடமாக OBC யை சேர்ந்தவர்தான் பிரதமரா இருக்கவேண்டிய நிலைமை.. இப்படியே போனால் இனி உயர்சாதியினர் பிரதமர் பதவியை மறந்துவிடவேண்டியதுதான்.. நாக்பூர் இதில் தலையிட்டு அருண் ஜெட்லீக்கு அல்லது ஸுஷுமா அல்லது நிதின்கட்கரிக்கு அந்த பதவியை வழங்கவேண்டும்.. இந்தியாவின் அணைத்து அதிகாரங்களும் குஜராத்தில் குவிவது நாக்பூருக்கே கேடாய் முடியும் என்பது விரைவில் அம்பலமாகும்.... ஏனென்றால் பாஜக ஆட்சிக்குவர உயர்சாதியினரின் பங்கு அளப்பரியது.. அதற்க்கு அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாமல் இருப்பது நாக்பூருக்கு நிச்சயம் இழுக்கு.. உடல்நிலை சரியில்லை என்றால் என்ன ? அருண் ஜெட்லீ பிரதமராக அணைத்து தகுதியும் உள்ளவர்தான்.. ஒருவேளை சாமி அதற்க்கு தடையாய் இருந்தால் சாமியை கூட பிரதமராக்கலாம்...வாஜ்பாய் போன்று மனதில் இரக்கமும் செயலில் புலியுமாய் இருக்கும் பிரதமரை எதிர்நோக்கும் ஒரு சராசரி தமிழனின் ஆசை இது
Sathya Dhara - chennai,இந்தியா
30-மே-2019 13:14Report Abuse
Sathya Dhara உங்கள் புலம்பலை கேட்க யாரும் தயாராக இல்லை. அறிவுரை சொல்ல ஆலோசனை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. மனதில் பெரிய பிஸ்தா என்று நினைத்துக்கொண்டு......இஷ்டப்படி புலம்புவதை நிறுத்தலாமே.......
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)