விவாதங்களில் பங்கேற்க காங்., செய்தி தொடர்பாளர்களுக்கு தடை

புதுடில்லி: டிவியில் நடக்கும் விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தித்தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அக்கட்சி தலைவர் ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தாலும், தனது முடிவை மாற்ற ராகுல் மறுத்துவிட்டார்.


இந்நிலையில், மீடியாக்களில் பங்கேற்கும் விவாதங்களில், அடுத்த ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறியுள்ளதாவது:ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே , தங்களது நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என மீடியாக்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு சுர்ஜிவாலா கூறியுள்ளார்.


Rpalnivelu - Bangalorw,இந்தியா
30-மே-2019 15:18 Report Abuse
Rpalnivelu ஏண்டா நைனா, நீங்கல்லாம் நாட்டுக்கு ஒர் நல்லதா விசயம் நடக்க விடமாட்டீங்களா? காலம்பூரா அடிமையா வாழ விரும்புறீங்களா? என்ன பீட ஜென்மங்களோ.
Ms.K - ,
30-மே-2019 13:48 Report Abuse
Ms.K ஆமா , அப்படியே ஒரு உருப்படியா விவாதம் பண்ணி கிழிகராங்க , அதுவும் ஒரு கருத்து திணிப்பு தான் , பாதி நேரம் ஒன்னும் உருப்படியான சமூக பிரச்சனையா இருக்காது , அப்டியே இருந்தாலும் கூச்சல் தான் அதிகம்!! ஒரு பட பிரச்சனையா இருந்தா கூட எடுத்து விவாதம் பண்ணி இருக்காங்க?!...இது தேவையா?( சர்கார்) ....நீங்க வேன பாருங்க , நேசமணி டாபிக் கூட இன்னைக்கு விவாதத்துக்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை !!
30-மே-2019 12:30 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரு மாதம் கழித்தாவது புது தலைவர் யார் என்று சொல்வீர்களா? இல்லை எங்கள் யாருக்குமே அந்த தகுதி இல்லை, ராகுல் தொடரட்டும் என்று சொல்ல போகிறீர்களா ?
Anand - chennai,இந்தியா
30-மே-2019 11:51 Report Abuse
Anand தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான டிவி விவாதங்களில் பங்கேற்கும் சிலரின் பேச்சுக்களை கவனித்தால் தேச விரோத கொள்கை அவர்களிடம் அப்பட்டமாக தெரியும். அப்படிப்பட்ட கயவர்களை இனம் கண்டு வேரோடு அழித்து விடவேண்டும். மேலும் இம்மாதிரி விவாதங்களை தடைசெய்யவேண்டும்.
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-2019 11:40 Report Abuse
JEYAM தமிழன் JEYAM காங்கிரசுக்கு ரோஷம் என்ற ஓன்று துளியேனும் இருந்தால் ஆளும்கட்சிக்கு விலைபோன ஆங்கில இந்தி TV ஊடகங்களுக்கு இனிமேல் அடுத்த ஆட்சி பிடிக்கும்வரை விவாதங்களுக்கு வரவே வராதீர்கள்.. நியாயமாக நடுநிலையாக பேசும் ராஜதீப் சர்தேசாய் நிகழ்ச்சியில் மட்டும் பங்கெடுங்கள்.. மற்ற ஊடகங்களை புறக்கணியுங்கள்... தமிழகத்தை பொறுத்தவரை அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது தி ஹிந்து தினமலர் மற்றும் NEWS 7 சேனல்...இந்த 3 ஊடகத்தை மட்டுமே நான் பார்க்கிறேன்... ஒரே நிலையில் நடுநிலையாக செய்திகள் வருகின்றன மற்றவை பற்றி நான் விலாவாரியாக எழுதலாம்..ஆனால் இங்கு பதிவேற்றம் செய்யப்படவாய்ப்பிலை.. தமிழகத்தில் நடுநிலையாக செயல்படும் தி ஹிந்து தினமலர் NEWS 7 சேனல் ஆகிய ஊடகங்களுக்கு நன்றி...
Venki - BANGALORE,இந்தியா
30-மே-2019 13:36Report Abuse
Venki😂😁😀😃...
காவல்காரன்: சுடலைஅவங்களை இனி கூப்பிட்டு பயன் இல்லை. எங்கேயோ ஆரம்பித்து அங்கு போய் விடும். தேவை தானா? நீ அப்ளிகேஷன் போடலாம்....
Balaji - Bangalore,இந்தியா
30-மே-2019 11:37 Report Abuse
Balaji சுர்ஜிவாலா காங்கிரஸ் தோற்பதற்கு காரணம். அவரே அறிக்கை வெளியிடுகிறார் .
pattikkaattaan - Muscat,ஓமன்
30-மே-2019 11:33 Report Abuse
pattikkaattaan டிவி விவாதங்களில் யாரும் உண்மையை பேசுவதில்லை... சேனல் நடத்துபவனுக்கு பொழுது போகிறது, காசு வருகிறது .. நாமதான் பார்த்து ஏமாறுகிறோம்
sankar - ghala,ஓமன்
30-மே-2019 11:19 Report Abuse
sankar தேர்தல் நேரத்தில் Rahul காந்தி கூறியது , பிரதமர் என்னோட விவாதம் செய்ய தயாரா, அவருக்கு என்னை கண்டால் பயம், எங்கே வேண்டுமானாலும், எப்போவெனலும் என்னோட விவாதம் பண்ண சொல்லுங்க சொன்னாரு இப்போ பிரதமர் free ya தான் இருக்காரு வந்து விவாதம் பண்ணு, ஏன் உங்க ஆளுகளுக்கு தடை போடுறே
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
30-மே-2019 10:54 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்த நிலை தமிழகத்திற்கும் பொருந்துமா? ஏனெனில், பல காங்கிரெஸ்ஸாரும் திமுகக்காரர்களும் வாயைத் திறந்தால் வந்து விழுவது எல்லாமே பொய்.
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
30-மே-2019 10:50 Report Abuse
Vaideeswaran Subbarathinam Yes.They have to settle Rahul's resignation issue.Otherwise they may have to face embarrassing moments.
மேலும் 16 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)