தோல்விக்கான இரு காரணங்கள்: கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லியில் உள்ள அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது குறித்து, ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. அனைத்து தொகுதிகளையும் கைபற்றிய பா.ஜ., தனது அசுர பலத்தை காண்பித்தது. இந்நிலையில் கட்சி தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், முழு மூச்சுடன் உழைத்தனர். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக வீசிய அலையே டில்லியிலும் காணப்பட்டது முதல் காரணம். இத்தேர்தலை மோடி - ராகுலுக்கு இடையேயான போட்டியாக மக்கள் கருதியது நம் தோல்விக்கான இரண்டாவது காரணம். இதற்காக மக்களிடம் சென்று எங்களுக்கு ஏன் ஓட்டு போடவில்லை என கேட்க முடியாது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, பஞ்சாபில் ஒரு தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. மேலும் டில்லியில் காங்., உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க ஆம்ஆத்மி விரும்பியது. அது கைகூடாமல் போக தனித்தனியே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஜூன்-2019 04:06 Report Abuse
meenakshisundaram இரண்டு கிடையாது ஒரே காரணம் தான் -கெஜ்ரிவால் .
Bhaskaran - Chennai,இந்தியா
30-மே-2019 08:54 Report Abuse
Bhaskaran இதுக்கு எதுக்கு கவலைப்படுகிண்றீர்கள் மக்கள் உங்களுக்கு அளித்துள்ள பதவிக்காலம் முடிவதற்குள் ஏதேனும் நன்மை செய்ய முயற்சி செய்யுங்கள் ஊழல் காங்கிரேசிடம் மண்டியிடாமல் உங்களின் தனித்தன்மையை காப்பாற்றவும்
Sathya Dhara - chennai,இந்தியா
30-மே-2019 13:08Report Abuse
Sathya Dhara வாடிகன் அடிமைகளிடம் அடிமை வேலை செய்பவர்களுக்கு தனித்தன்மை எங்கேயிருந்து வரும்....
sundarsvpr - chennai,இந்தியா
30-மே-2019 07:55 Report Abuse
sundarsvpr நினைப்பது நடக்கவில்லையெனின் முயற்சியில் கோளாறு என்று நினைக்க வேண்டும். முயற்சி தொடரவேண்டும். இன்றைக்கு தோல்விக்கு காரணம் நாளை வெற்றிக்கு அஸ்திவாரம் உடை அழுக்கானால் உடையை மாற்றுவதுபோல் வெற்றிக்கு வேறு வழிமுறை தேடவேண்டும்
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-மே-2019 06:35 Report Abuse
Natarajan Ramanathan இரண்டே காரணம்தான்டா அபிஷ்டு........... 1) உனக்கு யாரும் ஓட்டு போடலை...... 2) பிஜேபிக்கு எல்லோரும் போட்டனர்.
சீனு, கூடுவாஞ்சேரி மூன்றாவது, மோடியின் திறமையையும் உழைப்பையும் நேர்மையையும் அறியாமல் அவர் நமது நாட்டின் பிரதமர் என்றும் சிறிதும் மதியாமல் சர்வகாலமும் அவதூறு பேச்சுக்களும் தான் இந்த ஆளின் வீழ்ச்சிக்கு காரணம். மற்ற வர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் தன்னை மிகவும் படித்தறிந்த அதிமேதாவி என்ற நினைப்பில் கர்வம் கொண்டு ஆட்டம் போட்டதால் ஆண்டவன் அடக்கிவிட்டான்.
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
30-மே-2019 04:57 Report Abuse
Vasu 1 கெஜ்ரிவால் 2 கெஜ்ரிவால்.... அவ்வளவுதான்
கைப்புள்ள - nj,இந்தியா
30-மே-2019 04:11 Report Abuse
கைப்புள்ள நீங்க ஒவ்வொருத்தனும் நினைச்ச கெடுதல் பூரா உங்களையே வந்து தாக்கிடுச்சுடா வெறியனுகளா.
blocked user - blocked,மயோட்
30-மே-2019 04:03 Report Abuse
blocked user சென்ற முறை காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஆகவே ஆம் ஆத்மி ஜெயித்தது. இந்த அடிப்படையை பார்க்காமல் ஏதோ இவர்கள் மேதாவிகள் போல நினைப்பது தவறு..
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-மே-2019 03:45 Report Abuse
J.V. Iyer இவரெல்லாம் ஒரு தலைவர். இதெல்லாம் ஒரு கட்சி.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)