மோடியின் புதிய இந்தியா': டைம் இதழ்

புதுடில்லி: இந்திய வரலாற்றில், மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடியின் மாபெரும் வெற்றி சாதரணமானதல்ல. நடந்து முடிந்த தேர்தல் வழக்கமான ஒன்றுமல்ல. மிகமோசமான, தவறான பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து, மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் மோடி வென்றுள்ளார்.
இதுகுறித்து 'டைம்' இதழில், 'இந்தியா இங்க்.குரூப்பின்' தலைமை நிர்வாகி, மனோஜ் லாத்வா எழுதிய கட்டுரை:

தவறான பிரசாரம் :''கடந்த 75 ஆண்டுகளில், மோடியின் முதல் 5 ஆண்டு கொள்கைகள் விமர்சிக்கப்பட்டது போன்ற மோசமான விமர்சனங்கள் இதுவரை எழுந்ததில்லை. மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல், தவறான நிலைபாட்டில் இருந்து போர் தொடுத்திருந்தார். அவர் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறான விமர்சனங்களை முன் வைத்தார்.

50% ஓட்டு :ஆனால், கடந்த 1971 க்கு பிறகு 2 வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்த, அதிலும் மோடியின் கூட்டணி 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை நாடு முழுவதும் பெற்று இந்த பிரமாண்ட வெற்றியை ஈட்டியுள்ளது. இது இந்தியாவின் சமூகப் பிளவுகளை சமாளித்து மக்களை ஒருங்கிணைத்த வெற்றி.

இதற்கு ஏழை மக்களை, இந்துக்களை, மதச்சிறுபான்மையினரை சமூக ரீதியாக வளர்ச்சிபெற வைத்திடும், மோடி அமலாக்கிய கொள்கைகளே காரணம். இதன் காரணமாக, வேகமாக வறுமை குறைகிறது.

கழிப்பிடம், மின்சாரம் :இந்தியாவில் 40 சதவீத மக்களே, கழிப்பிட வசதிகள் பெற்றிருந்த நிலையில் தற்போது, 95 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். இந்த சுகதாரக்கொள்கை குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிராமப்புறங்களில், 40 சதவீதத்திற்கும் கீழிருந்த மின்சார வசதியை அனைவருக்கும் கிடைக்கச் செய்துள்ளார் மோடி.

ஐந்து தவளை :2014க்கு முன்னர் காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலையற்ற பொருதாளாதரக் கொள்கையை நிலைத்தன்மைக்கு கொண்டுவந்துள்ளார் மோடி. மோர்கன் ஸ்டேன்லியின் 'ஐந்து தவளை' பொருளாதாரக் கொள்கை என்று அழைக்கப்பட்ட அழிந்துபோன நிலையிலிருந்து மோடி மீட்டெடுத்து, இன்று உலகின் வளர்ந்து வரும் 5வது பெரிய பெருளாதார நாடாக மாற்றியுள்ளார்.

இருமடங்கு வரிவருவாய் ;நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த உடல்நலம், வசதிமிக்க குடியிருப்புகள், நிதி வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை இந்திய சமூகம் பயன்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார். இடையில் குறைந்த கால சிரமங்களை தந்த பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை அமல்படுத்தினாலும், அது நீண்டகால நோக்கில் பயனளிக்க கூடியது. இந்தியாவின் வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் அர்த்தம் சுகாதாரம் மற்றும் மின்சாரம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி கிடைக்கப் போகிறது என்பது.

20 கோடி வங்கிகணக்கு :ரொக்கப் பணத்திலிருந்து வெளியேறுவது என்ற கொள்கை மூலம், 20 கோடி புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை வங்கி வசதியில்லாதவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர். பென்சன் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான பணப்பயன்களை நேரடியாக முறைகேட்டிற்கு வழியின்றி அவர்களிடமே நேரடியாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரே வரி ; ஒரே சந்தை :அதேபோல, இந்தியாவை ஒரே வரிமுறையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி., வரியை அறிமுகப்படுத்தி உண்மையில் இந்திய சந்தையை ஒரே சந்தையாக ஒருங்கிணைத்துள்ளார் மோடி. கடந்த மன்மோகன்சிங் ஆட்சியில், பணவீக்க விகிதம் 12 சதவீதத்தை தொட்டிருந்தது. ஆனால், அதனை 2019 ஏப்ரலில் வெறும் 3 சதவீதமாக குறைத்ததும், கடந்த 15 ஆண்டுகாலமாக, 6.46 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3.42 சதவீதமாக கொண்டுவந்தும், சாதித்தார் மோடி.

ஜனரஞ்சகவாதத்திற்கு அடி :பல்லாண்டுகளாக நிலவி வந்த திறமைக்குறைவான, அதிகார வர்க்கத்தை முதல் பதவிக்காலத்தில் எதிர்கொண்ட மோடி, இந்த முறை அதில் பெரும் மாற்றம்கொண்டுவர உள்ளார். அரசின் அமைப்புகளை சீரமைப்பதன் மூலம், ஜனரஞ்சகவாதத்திற்கு முடிவுகட்டி, அதனை திறன்மிகுந்த அமைப்புகளாக்கும் பணியில் ஈடுபட உள்ளார். பொருளதார அடிப்படையில், தான் வாக்களித்தபடி உலகின் பெரிய, சிறந்த தொழில் மையமாக மாற்றும் முனைப்பில் உள்ளார்.

உலக அமைப்புகள் பாராட்டு :மோடியின் இதுபோன்ற சாதனைகள் அனைத்தும் தற்போது நடப்பு பயன்பாட்டில் உள்ளன. இவை ஐ.நா., சபை, ஐ.எம்.எப், உலகவங்கி போன்ற பல்வேறு உலகளாவிய அமைப்புகளின் பாராட்டை பெற்றவை.

அங்கீகாரம் :மோடி, அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாவது, சமூக பதற்றம் குறித்து மவுனம் காக்கிறார் என்பதே. ஆனால், அதையெல்லாம் தாண்டி அவரது பணிக்கு அங்கீகாரமாகத்தான் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளார்கள். அவர்கள் மோடியின் புதிய இந்தியாவை வெகுவாக அங்கீகரித்துள்ளார்கள்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.---------


Abdul Rahman - Madurai,இந்தியா
30-மே-2019 06:40 Report Abuse
Abdul Rahman மிக அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.
கோகுல் மதுரை ஜாமீன்ல வெளியே சுத்துவங்களுகெல்லாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விட்டு, ஏதோ காமராஜருக்கு ஓட்டு போட்டு மோடியை இங்கே தோற்கடித்த மாதிரி இவர்கள் பண்ணும் பில்டப் இருக்கே.... அப்பப்பா.....
southindian - chennai,இந்தியா
29-மே-2019 20:38 Report Abuse
southindian சாரதி அவர்கள் எந்த லோகத்தில் இருக்கிறார் . வரி வருமானம், தொழில் உற்பத்தி வாங்கும் திறன் வாங்கி கடன் உயர்ந்துள்ளது
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
29-மே-2019 20:33 Report Abuse
Sundaram Bhanumoorthy மறை கழண்ட மாக்கள்.மன்னித்து விட்டு விடவும்.
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
29-மே-2019 19:37 Report Abuse
மனிதன்
Pradeep - chennai,இந்தியா
29-மே-2019 19:34 Report Abuse
Pradeep PIGS ARE SNORTING WHEN MODI RETURNS. Don't care these pigs
K.P SARATHI - chennai,இந்தியா
29-மே-2019 19:29 Report Abuse
K.P  SARATHI புதிய வேலைவாய்ப்பு இல்லை இருந்த வேலை வாய்ப்பு போனது நடுத்தர மக்கள் நடுத்தெருவில் மேலும் gst செல்வந்தர்களை ,மட்டும் வாழவைக்கிறது எத்தனையோ சிறுகுறு தொழிற்சாலை முடியாதல் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தார்
மாயவரத்தான் - chennai,இந்தியா
13-ஜூன்-2019 18:21Report Abuse
மாயவரத்தான் வண்டி போயிடிச்சு ..... இங்கியே நின்னு இதயே புலம்பிகிட்டு இருந்தா எப்படி ஐயோ பாவம்...
Aarkay - Pondy,இந்தியா
29-மே-2019 19:12 Report Abuse
Aarkay ABCD Grow up man ABCD தாண்டி இன்னும் 23 எழுத்துக்கள் உள்ளன கற்றுக்கொள்ளவும். உங்கள் கபட பிரச்சாரம் தான் ஊத்திக்கிச்சே பட்ட அடி போதாதா? இங்கு நீ தனி ஒருவன் நாங்கள் வெகுஜன மக்கள் எங்கள் பிரதமர் பக்கம் நீ போகலாம்
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
29-மே-2019 18:28 Report Abuse
JEYAM தமிழன் JEYAM தம்பி வல்வில் ஊறி போனமாசம் பாக்கி எழுதினான்...இந்த மாசம் குஜராத்தி எழுதியிருக்கான்... வெள்ளைக்காரன் அடுத்து எழுதினா தான் உண்மை வெளிவரும்... அதுவரை இந்த கட்டுரையை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்துக்கொண்டு வெயில் படமால் இருக்க குடையைப்பிடித்து கொண்டு நிற்கவும்..
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
29-மே-2019 19:25Report Abuse
வல்வில் ஓரி மசால் வடை ன்னா மசால் வடை தான் யா...ஆஹா..அறுசுவையும் நாக்குல நடனமாடுதே... ஹா ஹா.....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
29-மே-2019 19:29Report Abuse
வல்வில் ஓரி உனக்கு வெள்ளைக்கானோடது தான் ...பிடிக்கும் ன்னா . நீ ஆஸ்திரேலியாவுக்கோ இல்லை அண்டார்டிகாவுக்கோ போ... இந்தியா கார தினமலர் தான் எனக்கு பிடிக்கும்...
Aarkay - Pondy,இந்தியா
31-மே-2019 15:29Report Abuse
Aarkayநாங்க குடை பிடிக்கிறோம் நீ போய் சொம்பு தூக்கு....
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
29-மே-2019 18:24 Report Abuse
JEYAM தமிழன் JEYAM மனோஜ் லாதவா குஜராத்தியாக இருப்பார் போல உள்ளது... பாஜகவின் IT WING தலைமை செயலர் எழுதிய கட்டுரைப்போல உள்ளது.... அமித்சா எழுதிக்கொடுத்ததை அச்சடித்து போல உள்ளது... இதைவாசித்து பக்தர்கள் வேண்டுமானால் புளங்காகிதம் அடையலாம்... பொதுமக்களுக்கு உண்மை தெரியும்.. இது நேர்மையில்லா வெற்றி.. EC என்னும் அம்பயர் ஆட்டம் முழுதும் பாஜகவுடன் கூட்டணி போட்டு ஜெயித்த வெற்றி என்று ... .பாஜகவின் செல்லாகுட்டி EC யே NDA 43.5 % ஓட்டுக்களை பெற்றுள்ளது எனக்கூறும்போது இந்த கட்டுரை பாஜக 50 % க்கும் மேலே ஓட்டுவாங்கியதாக கூறுவது பொய்களின் உச்சக்கட்டம்
Darmavan - Chennai,இந்தியா
29-மே-2019 20:17Report Abuse
Darmavanபோன வாரம் எழுதியவன் உன் போல் பாகிஸ்தானி ஆள் அவனுக்கு யார் எழுதி கொடுத்தார்கள்....
Sathya Dhara - chennai,இந்தியா
30-மே-2019 06:49Report Abuse
Sathya Dhara தர்மவான் அவர்களே....பாகிஸ்தான் ஆள் என்று எழுதாதீர்கள். அங்கு நல்ல நேர்மையான முஸ்லீம்கள் நிறையவே இருக்கிறார்கள். இந்த கும்பலை எப்போதுமே வெறி பிடித்த ஜிஹாதி கும்பலாகவே கருத வேண்டியுள்ளது.. அப்படியே எழுதுங்கள்....
மேலும் 48 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)