மோடியின் 'சிறப்பு அழைப்பாளிகள்': மம்தா ஷாக்

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையில் உயிரிழந்த 50க்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்களின் குடும்பத்தினரை பதவியேற்பு விழாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மறைமுக செய்தி:



அரசியல் காரணங்களுக்காக தொண்டர்கள் கொல்லப்பட்டதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள்''சிறப்பு அழைப்பாளர்கள் '' பட்டியலின் கீழே சேர்க்கப்பட்டுள்ளனர். இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தரப்படும் மறைமுக செய்தியாக கருதப்படுகிறது.
உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினரை அழைப்பது என நேற்று (மே 28) பிரதமர் மோடியுடன் பா.ஜ.,தலைவர் அமித் ஷா நடத்திய சுமார் 5 மணி நேர ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல் முதல் தற்போது நடந்த பொதுத்தேர்தல் வரை நடந்த வன்முறைகளில் பல பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட 7 ஆயிரம் விருந்தினர்களில் கொல்லப்பட்ட தொண்டர்களின் குடும்பத்திற்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டது. இது 2021 ம் ஆண்டில் மேற்கு வங்க சட்டசபைக்கு நடக்கும் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., அளிக்கும் மறைமுக செய்தி என டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், திரிணமுல் காங்கிரசின் வன்முறைக்கு எதிராக பா.ஜ., கட்சி உங்களுடன் துணை நிற்கிறது. உங்களை கவனத்தில் கொள்கிறோம் என தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கையை மேலிடம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தன.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமித் ஷா பேசும்போது, உயிரிழந்த தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக கூறினார்.
மே.வங்கத்தில் தற்போது நடந்த தேர்தலின் போது பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தேர்தலில், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் பல பேரணிகளை நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்க மம்தா பானர்ஜியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில், 18 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 34 இடங்களில் வெற்றி பெற்ற திரிணாமுதல் இப்போது 22 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், 60 கவுன்சிலர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)