ஒடிசாவில், பாதி எம்.எல்.ஏ.,க்களுக்கு கிரிமினல் வழக்குகளில் தொடர்பு

புதுடில்லி : ஒடிசா சட்டசபை தேர்தலில் வென்ற, எம்.எல்.ஏ.,க்களில், 67 பேர் மீது, 'கிரிமினல்' வழக்குகள் உள்ளன. இதில், 49 பேர் மீது, கொலை, கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவில், 147 சட்ட சபை தொகுதிகளில், ஒன்றை தவிர, இதர இடங்களுக்கு, தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த, 112 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 46 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில், 33 பேர் மீது, கொலை, கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற, 33 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களில், 14 பேர் மீது, குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில், 10 பேர் மீது, தீவிர குற்றச்சாட்டு உள்ளது. இந்த தேர்தலில், காங்., வேட்பாளர்கள், ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், ஆறு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. வேட்பாளர்கள், தேர்தல் ஆணையத்தில் அளித்த, பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த விபரங்களை, 'ஒடிசா எலக் ஷன் வாட்ச்' நிறுவனம் வெளியிட்டு உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)